தமிழ்நாடு

KV பள்ளிகளில் முற்றிலும் புறக்கணிக்கப்பட்ட தமிழ் மொழி.. ஒரு தமிழ் ஆசிரியர் கூட இல்லை - RTI மூலம் அம்பலம்!

தமிழகத்தில் தமிழுக்கு பதில் இந்தியும், சமஸ்கிருதமும் மட்டுமே கட்டாயப் பாடம் என ஆர்.டி.ஐ. மூலம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு கேந்திரிய வித்யாலயா பள்ளி பதிலளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

KV பள்ளிகளில் முற்றிலும் புறக்கணிக்கப்பட்ட தமிழ் மொழி.. ஒரு தமிழ் ஆசிரியர் கூட இல்லை - RTI மூலம் அம்பலம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்கையில், அரசு திட்டங்களை அறிவிக்கும் போது என திருக்குறளை கூறிவிட்டு இந்தியையும் சமஸ்கிருதத்தையும் தொடர்ந்து திணிக்கும் வேலைகளில் மத்திய மோடி அரசு ஈடுபட்டு வருகிறது என பரவலாக குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது.

KV பள்ளிகளில் முற்றிலும் புறக்கணிக்கப்பட்ட தமிழ் மொழி.. ஒரு தமிழ் ஆசிரியர் கூட இல்லை - RTI மூலம் அம்பலம்!
KV பள்ளிகளில் முற்றிலும் புறக்கணிக்கப்பட்ட தமிழ் மொழி.. ஒரு தமிழ் ஆசிரியர் கூட இல்லை - RTI மூலம் அம்பலம்!

அதனை மெய்ப்பிக்கும் வகையில், பெயர் குறிப்பிட விரும்பாத சமூக ஆர்வலர் ஒருவர் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு கேந்திரிய வித்யாலயா பள்ளி அளித்திருக்கும் பதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆர்.டி.ஐ. மூலம் கேட்கப்பட்ட 16 கேள்விகளுக்கு கேந்திரிய வித்யாலயா சங்கம் கடந்த ஜனவரி 25ம் தேதி பதிலளித்துள்ளது தற்போது சமூக வலைதளங்களில் வட்டமடித்து வருகிறது. அதில், “தமிழகத்தில் உள்ள 49 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளிலும் 6ம் வகுப்பு மேல் தமிழ் மொழி கட்டாயப்பாடம் இல்லை.

KV பள்ளிகளில் முற்றிலும் புறக்கணிக்கப்பட்ட தமிழ் மொழி.. ஒரு தமிழ் ஆசிரியர் கூட இல்லை - RTI மூலம் அம்பலம்!

மாறாக இந்தி மற்றும் சமஸ்கிருதத்தில் தேர்ச்சியானால் மட்டுமே 6ம் வகுப்பில் இருந்து 7ம் வகுப்புக்கு செல்ல முடியும். 49 பள்ளிகளில் ஒரு தமிழ் ஆசிரியர் கூட இல்லை. தமிழை தவிர பிற செம்மொழிகளும் கற்பிக்கப்படுவதில்லை. சமஸ்கிருதத்துக்கு பதில் தமிழை மொழி பாடமாக படிக்க இயலாது.”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories