தமிழ்நாடு

எழுவர் விடுதலை: பல்டி அடித்த மத்திய அரசு; கைவிரித்த ஆளுநர்.. நாடகமாடும் அதிமுக - மு.க.ஸ்டாலின் கேள்வி!

ஏழு பேரை விடுவிக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கே உள்ளது என தமிழக ஆளுநர் பன்வாரிலால் தெரிவித்துள்ளது திசைத்திருப்பும் செயலாக பார்க்கப்படுகிறது.

எழுவர் விடுதலை: பல்டி அடித்த மத்திய அரசு; கைவிரித்த ஆளுநர்.. நாடகமாடும் அதிமுக - மு.க.ஸ்டாலின் கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 30 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரை விடுவிப்பது தொடர்பாக ஆளுநருக்கே அதிகாரம் உள்ளது என்றும் இது குறித்து அவரே முடிவெடுப்பார் என மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து எழுவரை விடுதலை செய்வது குறித்து ஒரு வாரத்தில் முடிவெடுத்து அறிவிக்க ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. இந்நிலையில், மத்திய அரசு சார்பில் உள்துறை துணை செயலாளர் நசீன் கான் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரை விடுவிக்கும் விவகாரத்தில் குடியரசுத் தலைவருக்கே அதிகாரம் இருப்பதாக தமிழக ஆளுநர் தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எழுவர் விடுதலை: பல்டி அடித்த மத்திய அரசு; கைவிரித்த ஆளுநர்.. நாடகமாடும் அதிமுக - மு.க.ஸ்டாலின் கேள்வி!

கடந்த 25ம் தேதி தன்னுடைய முடிவை ஆளுநர் உள்துறை அமைச்சகத்துக்கு தெரிவித்துவிட்டதால் கருணை மனுக்கள் குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது எனவும் உள்துறை துணைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

எழுவர் விடுதலை விவகாரத்தில் குடியரசுத் தலைவருக்கே அதிகாரம் இருப்பதாக கூறிவந்த மத்திய அரசு, அதன் பிறகு நீதிமன்ற விசாரணையின் போது ஆளுநரே முடிவெடுப்பார் என பல்டி அடித்தது. தற்போது தனக்கு அதிகாரம் இல்லையென எழுவர் விடுதலை விவகாரத்தை குடியரசுத் தலைவர் பக்கம் திருப்பி ஆளுநர் கைவிரித்துள்ளார்.

இப்படி இருக்கையில், ஜனவரி 25ம் தேதியே ஆளுநர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதிய பிறகு 29ம் தேதி முதலமைச்சர் பழனிசாமி எழுவர் விடுதலை குறித்து ஆளுநரிடம் மனு கொடுத்திருக்கிறார். தற்போது இந்த சந்திப்பு சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், எழுவர் விடுதலை தொடர்பாக அமைச்சரவை தீர்மானத்தை ஆதரித்து - ஆளுநரை வலியுறுத்தி - அவர் கிடப்பில் போட்டதைக் கண்டித்து, உரையையும் புறக்கணித்தது திமுக! எல்லாவற்றிலும் திமுக வெளிப்படை!

ஆனால் ஆளுநரை எதற்கோ சந்தித்து விட்டு வந்து 7 பேர் விடுதலை பற்றிப் பேசினேன் என்கிறார் முதலமைச்சர் பழனிசாமி. எது நாடகம்? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

banner

Related Stories

Related Stories