தமிழ்நாடு

“இந்தியாவை இலங்கை எப்போதும் மதிப்பதில்லை” : நிரந்தர தீர்வுக்கு வழி என்ன? - முரசொலி தலையங்கம்

இந்திய - இலங்கை ஒப்பந்தம் என்னாவது? அதை வலியுறுத்தச் சென்ற ஜெய்சங்கர் வலியுறுத்தலுக்கு என்ன மரியாதை கிடைத்தது? என்பது நாட்டுக்குத் தெரிய வேண்டாமா?

“இந்தியாவை இலங்கை எப்போதும் மதிப்பதில்லை” : நிரந்தர தீர்வுக்கு வழி என்ன? - முரசொலி தலையங்கம்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஜனவரி முதல் வாரத்தில் இலங்கைக்குச் சென்று இருந்தார். இலங்கை அதிபர், இலங்கையின் வெளியுறவுத் துறை அமைச்சர், தமிழ்த் தேசிய கூட்டமைப்புக் கட்சிகளின் தலைவர்களை 3 நாள் பயணமாக அவர் சந்தித்த செய்திகள் வெளியாயின.

அவர் இந்தியா வந்ததற்குப்பிறகு, இலங்கையில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண் தகர்க்கப்பட்டது. இப்போது கச்சத்தீவு அருகே ஜனவரி 18ம் தேதி இரவு மீன் பிடித்துக் கொண்டிருந்த இராமேசுவரம் மீனவர்கள் 4 பேரை அவர்களின் படகோடு மோதி அவர்கள் நால்வரையும் இலங்கைக் கடற்படை மூழ்கடித்துக் கொன்று இருக்கிறது. கடல் எல்லை தெரியாமல் அவர்கள் மீன் பிடித்திருக்கலாம். அதற்காக அவர்களை கைது செய்து இருக்கலாம். படகுகளைக் கைப்பற்றி இருக்கலாம். ஆனால், மூழ்கடித்துக் கொன்றிருப்பது அறமில்லை.

கொல்லப்பட்ட மீனவர்களின் உடல்கள் இலங்கையின் கடற்பகுதியில் கரை ஒதுங்கி இருக்கின்றன. அந்த உடல்களை கண்டெடுத்து இலங்கைக் கடற்படையினர் மருத்துவமனைக்கு அனுப்பி இருக்கின்றனர். ஜன.21 ஆம் தேதி இந்திய ஹைகமிஷனருக்கு இதைப் பற்றி தெரிவித்து இருக்கிறார்கள். ஆனால், இலங்கைக் கடற்படையால் மூழ்கடித்துக் கொல்லப்பட்ட 4 மீனவர்களின் உயிர்களை இலங்கை அரசால் திரும்பத் தந்துவிட முடியாது. மேலும், 2011 ஆம் ஆண்டும் இதே போல் 4 மீனவர்களை நடுக்கடலில் மூழ்கடித்துக் கொன்ற சம்பவம் நடந்தது.

“இந்தியாவை இலங்கை எப்போதும் மதிப்பதில்லை” : நிரந்தர தீர்வுக்கு வழி என்ன? - முரசொலி தலையங்கம்

10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இச்சம்பவம் இப்போது நடந்து இருக்கிறது. இதுகுறித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சமீபத்தில் இலங்கை சென்ற இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் மீனவர் பிரச்சினைக் குறித்துப் பேசியதாக தெரிவித்து இருந்தார்.

ஆனால், அவர் இந்தியா திரும்பியவுடன் இலங்கைக் கடற்படை 4 மீனவர்களைக் கொன்றிருப்பது இலங்கையிலுள்ள ராஜபக்சே சகோதரர்கள் இந்திய நாட்டையோ, இந்திய மத்திய அரசையோ மதிப்பதில்லை என்பதைக் காட்டு கிறது. எனவே, தமிழக மீனவர்கள் 4 பேரை மூழ்கடித்துக் கொன்றிருப்பதற்கு பிரதமர் நரேந்திரமோடி உடனடியாக இலங்கை அரசுக்குக் கண்டனம் தெரிவிக்க வேண்டும் எனவும், இலங்கைக் கடற்படையால் கொல்லப்பட்ட மீனவர்களின் குடும்பத்திற்கு தலா ஐந்து கோடி ரூபாய் இழப்பீடு வழங்கிட இலங்கை அரசை நிர்ப்பந்திக்க வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்’ என்று கூறியிருக்கிறார்.

எடுத்துக்காட்டிற்காக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜனவரி முதல் வாரத்தில் 3 நாள் பயணமாக இலங்கைக்கு ஏன் போனார்? இந்தியப் பிரதமராக இருந்த இராஜீவ் காந்திக்கும் - இலங்கையின் அதிபராக இருந்த ஜெயவர்த்தனேவுக்கும் ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி இலங்கை அரசு 13-ஆவது சட்டத் திருத்தத்தை ஒப்புக் கொண்டது. இதன்படி, ஈழத்தமிழர்களுக்கு அரைகுறை உரிமைகள் கிடைக்கும்.

“இந்தியாவை இலங்கை எப்போதும் மதிப்பதில்லை” : நிரந்தர தீர்வுக்கு வழி என்ன? - முரசொலி தலையங்கம்

ஆனால், இந்த உரிமைகள் வழங்கப்பட்டனவா? இது இந்திய அரசின் தலையீட்டினால் உருவாக்கப்பட்ட சட்டத்திருத்தம். இதை நிறைவேற்ற வேண்டிய கடமையும், பொறுப்பும் இந்திய அரசுக்கு உண்டு. அதை வலியுறுத்தவே ஜெய்சங்கர் இலங்கைப் பயணத்தை மேற்கொண்டார். ஆனால், கோத்தபயே அரசு இப்போது ‘மாகாண சுயாட்சி’ என்று அதிகாரத்தை பகிர முன்வரவில்லை. இப்போது இலங்கையில் மாகாணங்களையே முற்றாக ஒழித்து ஒற்றையாட்சி முறையை ஏற்படுத்தப் போவதாகக் கூறிக் கொண்டு இருக்கிறது.

அப்படியானால் இந்திய - இலங்கை ஒப்பந்தம் என்னாவது? அதை வலியுறுத்தச் சென்ற ஜெய்சங்கர் வலியுறுத்தலுக்கு என்ன மரியாதை கிடைத்தது? என்பது நாட்டுக்குத் தெரிய வேண்டாமா? இந்தியா அண்டை நாடு இலங்கைக்குப் பல உதவிகளை செய்து வருகிறது. ஆசியாவில் இண்டாவது பெரிய நாடு இந்தியா. இலங்கை அரசியல் வாணர்கள் திருப்பதிக்கு அடிக்கடி வழிபாடு நிகழ்த்த வருகிறார்கள். ஆனால், 1948லிருந்து இதுவரை தமிழ்நாட்டிற்கும் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் சுமுகமான பிரச்சினை தீர்ந்து இருக்கிறது என்று சொல்ல முடியவில்லை.

ஜெய்சங்கர்கூட, ‘ஏதாவது பார்த்து செய்யுங்கள்’ என்று பாமர அரசியல் போல சந்திப்பு நடந்து இருக்கிறதே தவிர, இராஜதந்திர ரீதியான சந்திப்பாக அது நிகழவில்லை என்று நாம் மிகவும் கவலைப்படுகின்றோம். இந்திய அரசும் இலங்கை அரசும் போட்டுக்கொண்ட ஓர் ஒப்பந்தத்தின் நிலையே இவ்வளவு பரிதாபகரமாக இருக்கிறபோது, தமிழக மீனவர்களை மூழ்கடித்துக் கொல்வது இலங்கைக் கடற்படையினருக்கு இது ஒரு சாகசமாக தோன்றுகிறது.

“இந்தியாவை இலங்கை எப்போதும் மதிப்பதில்லை” : நிரந்தர தீர்வுக்கு வழி என்ன? - முரசொலி தலையங்கம்

சுஷ்மா சுவராஜ் வெளியுறவுத்துறை அமைச்சராக இருக்கிறபோது மீனவர் பிரச்சினை பேசப்பட்டது. ஜெய்சங்கர் காலத்திலும் பேசப்பட்டு வருகிறது. முடிவு என்ன? தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கொன்று அந்தத் தீவின் கரையில் உடல்கள் ஒதுங்கியபோது, அதுகுறித்து இந்திய ஹை கமிஷனருக்கு அவர்கள் தெரிவிப்பார்கள்.

இந்திய அரசு செய்திகளைக் கேட்டுக் கொள்ளும் நிலையில்தான் இருக்குமா? இந்திய - இலங்கை ஒப்பந்தத்தையே காற்றில் பறக்கவிடும் இலங்கை அரசுக்கு மீனவர் பிரச்சினைப் பெரிதாகத் தோன்றவில்லை. ஆனால் நமக்கு அப்படி இல்லை. நமது மீனவர்கள் தமது உயிர்களைத் தொடர்ந்து இழக்க வேண்டியவர்களாக இருக்கிறார்கள்.

ஆகவே இலங்கை அரசுக்கு அழுத்தம் தர இந்திய அரசு முன் வரவேண்டும். அந்த அழுத்தம் எப்படி இருக்க வேண்டும் என்பதை இந்திய வெளியுறவுத் துறை தீர்க்கமாக ஆலோசிக்க வேண்டும். எப்படியாயினும் இலங்கைப் பிரச்சினையில் ஒரு இராஜதந்திர முடிவு அவசியமென்றே நாம் கருதுகின்றோம். இதை தாமதிக்காமல் நிறைவேற்ற முன்வர வேண்டும்.

banner

Related Stories

Related Stories