தமிழ்நாடு

தி.மு.கவில் இணைந்த ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளர்கள்!

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரஜினி மக்கள் மன்றத்தைச் சேர்ந்த 4 மாவட்டச் செயலாளர்கள் தி.மு.க.வில் இணைந்தனர்.

தி.மு.கவில் இணைந்த ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளர்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று (17.1.2021), காலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்களான தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் டாக்டர் ஏ.ஜோசப் ஸ்டாலின், இராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் கே.செந்தில் செல்வானந்த், தேனி மாவட்டச் செயலாளர் ஆர்.கணேசன் மற்றும் தலைமைக்குழு, தொழில்நுட்ப அணி தலைவர் கே.சரவணன், இராமநாதபுரம் மாவட்ட இணைச் செயலாளர் ஏ.செந்தில்வேல், இராமநாதபுரம் மாவட்ட வர்த்தகர் அணி செயலாளர் எஸ்.முருகானந்தம் ஆகியோர் தி.மு.க.வில் இணைந்தனர்.

அதேப்போல், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதியரசர் பி.ஆர்.சிவக்குமார் தி.மு.க.வில் இணைந்தார்.

அதுபோது துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா எம்.பி., அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., செய்தி தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன்எம்.பி., திருவண்ணாமலை தெற்கு மாவட்டச் செயலாளர் எ.வ.வேலு எம்.எல்.ஏ., மாநில விவசாய அணி துணைத் தலைவர் தே.மதியழகன் ஆகியோர் உடனிருந்தனர்.

தி.மு.கவில் இணைந்த ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளர்கள்!

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த டாக்டர் ஏ.ஜோசப் ஸ்டாலின், “தமிழகத்தில் ஒரு நல்ல ஆட்சியை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினால் மட்டுமே கொடுக்க முடியும். அதனால் எங்களை தி.மு.கவில் இணைத்துக் கொண்டோம். அதுமட்டுமல்லாது, ரஜினி மக்கள் மன்றத்தைச் சேர்ந்த மேலும் பல நிர்வாகிகள் தி.மு.கவில் இணைவார்கள் ” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories