தமிழ்நாடு

பாதிக்கப்பட்ட மக்களின் அழுகுரலை வேடிக்கை பார்க்கும் அ.தி.மு.க அரசை கண்டித்து தி.மு.க ஆர்ப்பாட்டம்!

பாதிக்கப்பட்ட மக்களின் அழுகுரலை வேடிக்கை பார்த்துக்கொண்டு, எந்த நடவடிக்கையும் எடுக்காத, நிர்வாகத் திறனற்ற அடிமை அ.தி.மு.க அரசை கண்டித்து கோவை மாநகர் கிழக்கு மாவட்ட தி.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம்

பாதிக்கப்பட்ட மக்களின் அழுகுரலை வேடிக்கை பார்க்கும் அ.தி.மு.க அரசை கண்டித்து தி.மு.க ஆர்ப்பாட்டம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

சிங்காநல்லூர், ஹவுசிங் யூனிட் மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, மழையினால் வீடுகள் இடிந்து பெரும் விபத்து ஏற்படும் முன், மழையினால் பெரிதும் சேதமடைந்துள்ள இந்த வீடுகளை இடித்து விட்டு, காலதாமதம் இல்லாமல், அதே இடத்தில் புதிய வீடுகளை கட்டித் தர வேண்டும் என்றும், அதுவரை, அதே இடத்தில் இந்த பாதிக்கப்பட்ட மக்களுக்கு, தற்காலிக வீடுகள் அமைத்துத் தந்து, இந்த மக்களின் பாதுகாப்பை உறுதிப் படுத்தவேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட மக்களின் அழுகுரலை வேடிக்கை பார்த்துக் கொண்டு, எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க கையாலாகாத, “செவிடன் காதில் ஊதிய சங்கு போல”, நிர்வாகத் திறனற்ற இந்த அடிமை அ.தி.மு.க அரசை கண்டித்தும் வருகின்ற 20.01.2021 புதன்கிழமை மாலை 4.00 மணியளவில் சிங்காநல்லூர் உழவர் சந்தை அருகில், அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் கோவை மாநகர் கிழக்கு மாவட்ட தி.மு.க சார்பில் மக்களைத் திரட்டி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கோவை மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிவிப்பில், “கோவை மாநகராட்சி சிங்காநல்லூர் தொகுதி, 64 வது வட்டம், உழவர் சந்தை அருகில் உள்ள ஹவுசிங் யூனிட் பகுதியில் 17.55 ஏக்கர் பரப்பளவில், சுமார் 30 ஆண்டுகளுக்கு முன், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் கட்டப்பட்ட 960 அடுக்கு மாடி குடியிருப்பு வீடுகள் உள்ளது. இந்த குறுகிய காலத்திற்குள்ளாகவே இந்த வீடுகள் அனைத்தும் சிதிலமடைந்து, பாழடைந்து, எப்பொழுது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் இந்த குடியிருப்பில் உள்ள மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து, இனி எங்கு செல்வது என்று தெரியாமல் தவித்து வருகிறார்கள்.

இதுகுறித்து, கடந்த 2016 ம் ஆண்டு, 2017 ம் ஆண்டு ஆகிய 2 வருடங்களிலும் நடைபெற்ற தமிழக சட்டமன்ற நிதி நிலைக் கூட்டத் தொடரிலும், கேள்வி நேரத்திலும், கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்தும் பலமுறை வலியுறுத்தி உள்ளேன். 14.06.2018 அன்று நடைபெற்ற சட்டமன்ற நிதி நிலைக் கூட்டத் தொடரிலும் , இந்த வீடுகள் பாதிக்கப்பட்ட நிலையிலும், சிதிலமடைந்து இடிந்து விழும் நிலையிலும் உள்ளது என்றும் இந்த மக்கள் தங்குவதற்கு தமிழக அரசு உடனடியாக மாற்று ஏற்பாடுகளை செய்து அந்த மக்கள் வாழ்வதற்குண்டான நடவடிக்கைகளை உறுதி செய்ய வேண்டும் என்றும் பேசினேன்.

கடந்த 13.12.2019 அன்று தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், ஆயிரக்கணக்கான பொதுமக்களைத் திரட்டி, திமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. கடந்த 2016 ம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக, ஐந்து ஆண்டுகளாக நான் இது குறித்து பேசியும், போராடியும் வலியுறுத்தியும் வருகிறேன்.

இந்த நிலையில் , கடந்த 15.12.2019 அன்று, துணை முதல்வர் பன்னீர்செல்வம் நேரடியாக இங்கு ஆய்வு மேற்கொண்டு , விரைவில் நடவடிக்கை எடுப்பதாக கூறி சென்றார். துணை முதல்வர் இவ்வாறு அறிவித்து ஓராண்டு நிறைவடைந்தும் இதுவரையிலும் ஒரு சிறு கல் கூட நகர்த்தப்படவில்லை.

இந்நிலையில் கடந்த இரண்டு மாதம் முதல் கோவை முழுக்க தொடர்ந்து பெய்து வரும் மழையினால், கடந்த 28.11.2020 ம் தேதி இந்த குடியிருப்பில் உள்ள 538 எண் கொண்ட வீட்டின் போர்ட்டிகோ, மழையினால் இடிந்து விழுந்து. இந்த வீட்டில் இருந்தவர்கள் படுகாயமடைந்தனர். இது போல, இப்பகுதியில் உள்ள சிதிலமடைந்த குடியிருப்புகள் அனைத்தும், தொடர்ந்து பெய்த மழையினால், எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழக்கூடிய, ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் இந்த குடியிருப்பில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. சென்னை மவுலிவாக்கம், மேட்டுப்பாளையம் போன்ற பகுதிகளில் நடந்த விபத்துக்கள் போல மீண்டும் இந்த பகுதியில் நடைபெறாமல் இருக்க போர்க்கால அடிப்படையில் இந்த அரசு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

தி.மு.க மற்றும் பொதுமக்களின் ஒட்டுமொத்த போராட்டத்தை உதாசீனப்படுத்தி, பல ஆண்டுகளாக கும்பகர்ணன் போல தூங்கிக்கொண்டு, பாராமுகமாக, சிங்காநல்லூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசிக்கும் மக்களை பற்றி கவலைப்படாமல் மக்களைக் காக்கும் தனது கடமையிலிருந்து நழுவி, பாதிக்கப்பட்ட மக்களின் அழுகுரலை வேடிக்கை பார்த்துக் கொண்டு, எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க கையாலாகாத , “செவிடன் காதில் ஊதிய சங்கு போல”, நிர்வாகத் திறனற்ற இந்த அடிமை அ.தி.மு.க அரசு, தமிழ்நாட்டில் ஆட்சி நடத்துவது வெட்கக்கேடாக இருக்கிறது.

இந்த அடிமை அரசு முற்றிலும் செயலிழந்து, முடங்கிக் கிடக்கிறது என்பதற்கு இது, மேலும் ஒரு உதாராணமாக உள்ளது. பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் தங்களது உரிமைகளைத் தக்க வைத்துக் கொள்ள குரல் கொடுத்துப் போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதற்கு கோவை மாநகர் கிழக்கு மாவட்ட தி.மு.க சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆகவே, பாதிக்கப்பட்ட இந்த மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, வீடுகள் இடிந்து பெரும் விபத்து ஏற்படும் முன், மழையினால் பெரிதும் சேதமடைந்துள்ள இந்த வீடுகளை உடனடியாக இடித்து விட்டு, காலதாமதம் இல்லாமல், அதே இடத்தில் புதிய வீடுகளை கட்டித் தர வேண்டும். அதுவரை, அதே இடத்தில் இந்த பாதிக்கப்பட்ட மக்களுக்கு, தற்காலிக வீடுகள் அமைத்துத் தர வேண்டுமென்றும் என்று வலியுறுத்தி வருகின்ற 20.01.2021 புதன்கிழமை மாலை 4.00 மணியளவில் சிங்காநல்லூர் உழவர் சந்தை அருகில், அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் கோவை மாநகர் கிழக்கு மாவட்ட தி.மு.க சார்பில் மக்களைத் திரட்டி மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற உள்ளது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், கோவை மாநகர் கிழக்கு மாவட்டத்திற்குட்பட்ட, மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர்கள், தலைமைக்கழக நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதிக்கழக பொறுப்பாளர்கள் மற்றும் பொறுப்புக்குழு உறுப்பினர்கள், வட்டக் கழக பொறுப்பாளர்கள் மற்றும் பொறுப்புக்குழு உறுப்பினர்கள் அனைத்து அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கழக முன்னோடிகள், செயல்வீரர்கள், கழகத் தோழர்கள், குடியிருப்பு நகர் நல சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளாக பங்கேற்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories