தமிழ்நாடு

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு : வியந்து பார்த்த ராகுல் காந்தி - விளக்கம் கொடுத்த உதயநிதி ஸ்டாலின் !

அவனியாபுரத்தில் ராகுல்காந்தி மற்றும் தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இருவரும் இணைந்து ஒரே மேடையில் சீறிப்பாயும் காளைகளையும், திமிலைப் பிடித்து அடக்கி ஆளும் காளையரையும் கண்டுகளித்தனர்.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு : வியந்து பார்த்த ராகுல் காந்தி - விளக்கம் கொடுத்த உதயநிதி ஸ்டாலின் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியை பார்வையிடுவதற்காக தி.மு.க இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வருகைத் தந்தார்.

அப்போது, உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு கிராம கமிட்டியினர் பொன்னாடை அணிவித்து வரவேற்பு அளித்தனர். வாடிவாசலில் சீறி வரும் காளைகளை பிடிக்கும் சிறந்த காளையருக்கும், திமில்பிடி கொடுக்காமல் திமிரி ஓடிய சிறந்த காளைகளுக்கும் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தங்க மோதிரங்கள், தங்கக் காசுகளை பரிசுகளாக வழங்கினர்.

அதனைத் தொடர்ந்து, அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல்காந்தி போட்டியை பார்வையிட வந்தவார். அப்போது தலைவர் ராகுல்காந்தி மற்றும் தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இருவரும் இணைந்து ஒரே மேடையில், சீறிப்பாயும் காளைகளையும் திமிலைப் பிடித்து அடக்கி ஆளும் காளையரையும் கண்டுகளித்தனர்.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு : வியந்து பார்த்த ராகுல் காந்தி - விளக்கம் கொடுத்த உதயநிதி ஸ்டாலின் !

திமிரி ஓடிய காளைகளையும், மாடுபிடி வீரர்கள் பற்றியும் ராகுல் காந்திக்கு உதயநிதி ஸ்டாலின் விளக்கம் கொடுத்தார். இதனையடுத்து பேசிய ராகுல் காந்தி, “தமிழ் மக்களுக்கு வணக்கம், தமிழக மக்களுடன் நின்று அவர்களின் வரலாற்றை பாரம்பரியத்தை காக்கவேண்டியது எனது கடமை. உங்களது உணர்ச்சிகளையும், கலாச்சாரத்தையும் வந்துள்ளேன்” எனத் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories