தமிழ்நாடு

“வாஜ்பாயை அழைக்க டெல்லிக்குப் போகும் எடப்பாடி பழனிசாமி” - அ.தி.மு.க அமைச்சரின் உளறல்!

எடப்பாடி பழனிசாமி பிரதமர் வாஜ்பாயை சந்திக்க உள்ளதாக அமைச்சர் பாஸ்கரன் பேசியதால் கூட்டத்தில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

“வாஜ்பாயை அழைக்க டெல்லிக்குப் போகும் எடப்பாடி பழனிசாமி” - அ.தி.மு.க அமைச்சரின் உளறல்!
Vignesh
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

அ.தி.மு.க அமைச்சரவையில் அதிகமாக உளறுவது யார் என உட்குழுப் போட்டி இருக்கிறதோ எனத் தோன்றுமளவுக்கு அமைச்சர்கள் தினந்தோறும் பொதுமேடைகளில் உளறுவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கின்றனர்.

அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட பல அமைச்சர்கள் இம்மாதிரியான உளறல்களுக்குப் பெயர்போனவர்கள்.

மோடியின் ஊதுகுழலாகத் தமிழகத்தில் செயல்பட்டு வந்தாலும், நாட்டின் தற்போதைய பிரதமர் யார் என்பதில் அ.தி.மு.க அமைச்சர்களுக்கு இன்னும் குழப்பம் தீர்ந்தபாடில்லை.

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், சில மாதங்களுக்கு முன்னர் மன்மோகன் சிங்கை பாரதப் பிரதமர் எனக் குறிப்பிட்டுப் பேசிய நிலையில், தற்போதைய பிரதமர் என வாஜ்பாயை குறிப்பிட்டுள்ளார் அமைச்சர் பாஸ்கரன்.

இன்று சிவகங்கை மாவட்டத்தில் பேசிய கதர் கிராம தொழில்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன், “காவிரி - குண்டாறு இணைப்பு திட்ட அடிக்கல் நாட்டு விழாவுக்கு பிரதமர் வாஜ்பாயை அழைக்க, முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்ல உள்ளார்” எனப் பேசியுள்ளார்.

அமைச்சர் பாஸ்கரனின் இத்தகைய பேச்சைக் கேட்ட கூட்டத்தில் இருந்தவர்கள் அதிர்ந்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories