தமிழ்நாடு

மைக்கை தூக்கிவீசிய விஜயபாஸ்கர்: அ.தி.மு.கவை மக்கள் தூக்கிவீசும் காலம் நெருங்குவதாக மு.க.ஸ்டாலின் கண்டனம்!

சன் டி.வி மைக்கை அகற்றிய அமைச்சர் விஜயபாஸ்கருக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மைக்கை தூக்கிவீசிய விஜயபாஸ்கர்: அ.தி.மு.கவை மக்கள் தூக்கிவீசும் காலம் நெருங்குவதாக மு.க.ஸ்டாலின் கண்டனம்!
Admin
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

ஆட்சியில் இருக்கும் இத்தனை ஆண்டுகாலமாக மக்கள் நலப் பணிகள் ஈடுபடாமல், தேர்தல் நெருங்கும் நேரத்தில் இலவசப் பொருட்களைக் கொடுத்து வாக்குகளைக் கவர திட்டம் தீட்டி வருகின்றனர் அ.தி.மு.க-வினர்.

அமைச்சர் விஜயபாஸ்கர், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தனது விராலிமலை தொகுதியில் தேர்தலைக் குறிவைத்து பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கி வருகிறார். இதுகுறித்து செய்தி வெளியிட்டதற்காக சன் டி.வி மீது தனது வெறுப்பைக் காட்டியுள்ளார் விஜயபாஸ்கர்.

தன்னைப் பற்றிய செய்தியை வெளியிட்டதற்காக, சன் டி.வி மைக் இருந்தால் பேட்டி அளிக்கமாட்டேன் என அடம்பிடித்த விஜயபாஸ்கர், மைக்கை அகற்றியது பத்திரிகையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், “புதுக்கோட்டை பத்திரிகையாளர் சந்திப்பின் போது சன் நியூஸ் தொலைக்காட்சியின் மைக்கைத் தூக்கி வீசியிருக்கிறார் அமைச்சர் விஜயபாஸ்கர். அ.தி.மு.க அமைச்சரவையையே மக்கள் தூக்கி வீசும் காலம் நெருங்கி வருகிறது.

ஊடகங்களை மிரட்டுவதும், அவர்களது செயல்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் அதிகார மமதையில் செயல்படுவதும் அ.தி.மு.க. அமைச்சர்களுக்கு வழக்கமானதுதான்.

மக்கள் இதனைக் கைகட்டி வேடிக்கை பார்க்கிறார்கள் என்று மட்டும் நினைக்க வேண்டாம்! அவர்களது எதிர்வினை தேர்தலில் எதிரொலிக்கும்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories