தமிழ்நாடு

நாளை சென்னை உட்பட 8 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு.. தமிழகத்தில் ஜன.,9வரை மழை நீடிக்கும்

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாளை சென்னை உட்பட 8 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு.. தமிழகத்தில் ஜன.,9வரை மழை நீடிக்கும்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, கடலூர், நாகப்பட்டினம், திருவண்ணாமலை, ராணிப்பேட் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

06.01.2021: நீலகிரி, கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய கடலோர மாவட்டங்கள், சென்னை மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய கூடும்.

07.01.2021: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

08.01.2021: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

09.01.2021: தென் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் கன மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், ஏனைய பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

நாளை சென்னை உட்பட 8 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு.. தமிழகத்தில் ஜன.,9வரை மழை நீடிக்கும்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் பெரும்பாலான பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், ஒரு சில பகுதிகளில் கன மழையும் பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பதிவாகியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக

நுங்கம்பாக்கம் (சென்னை), மதுராந்தகம் (செங்கல்பட்டு), ஹிந்துஸ்தான் யூனிவர்சிட்டி (செங்கல்பட்டு) தலா 6 , தரமணி Arg (சென்னை), கேளம்பாக்கம் (செங்கல்பட்டு), கொளப்பாக்கம் Arg (செங்கல்பட்டு), அண்ணா யூனிவர்சிட்டி Arg (சென்னை), திண்டிவனம் (விழுப்புரம்), சென்னை விமானநிலையம் (சென்னை) தலா 5 , தாம்பரம் (செங்கல்பட்டு) 4, மகாபலிபுரம் (செங்கல்பட்டு), மணிமுத்தாறு (திருநெல்வேலி), எண்ணூர் Aws (திருவள்ளூர்), திருக்கழுக்குன்றம் (செங்கல்பட்டு), சோழவரம் (திருவள்ளூர்), ரெட் ஹில்ஸ் (திருவள்ளூர்), பாபநாசம் (திருநெல்வேலி), செய்யூர் (செங்கல்பட்டு), அம்பத்தூர் (திருவள்ளூர்), தாமரைப்பக்கம் (திருவள்ளூர்) தலா 3 செமீ மழை பதிவாகியுள்ளது.

banner

Related Stories

Related Stories