தமிழ்நாடு

பொங்கல் பரிசு வழங்கும் இடங்களில் அதிமுக பேனர்: உடனடியாக அகற்றக்கோரி அரசு செயலாளர்களுக்கு திமுக கடிதம்!

பொங்கல் பரிசு வழங்கும் இடங்களில் அமைக்கப்பட்டுள்ள ஆளுங்கட்சியினரின் பேனார்களை அகற்றக் கோரி தமிழக அரசு செயலாளர்களுக்கு திமுக எம்.பி ஆர் ஏஸ் பாரதி கடிதம் எழுதியுள்ளார்.

பொங்கல் பரிசு வழங்கும் இடங்களில் அதிமுக பேனர்: உடனடியாக அகற்றக்கோரி அரசு செயலாளர்களுக்கு திமுக கடிதம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு அரசின் இலவச பொங்கல் பரிசு வழங்கும் இடங்களில் ஆளுங்கட்சியினர் வைத்திருக்கும் பேனர்களை உடனடியாக அகற்ற திராவிட முன்னேற்ற கழக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்பி தமிழக அரசின் தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர், கூட்டுறவு பதிவாளர் உள்ளிட்டோருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், நீதிமன்றத்தில் அரசியல் கட்சித் தலைவர்களின் படங்களை போட்டு இலவச பொங்கல் பரிசு டோக்கன் வழங்க அனுமதி இல்லை என்று உத்தரவாதம் கொடுத்து விட்டு, ஆளுங்கட்சியினர் முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் அந்தந்த பகுதியில் உள்ள அமைச்சர்களின் படங்களை போட்டு பேனர்கள் வைத்திருப்பது நீதிமன்றத்தில் கொடுத்த உத்தரவாதம் மற்றும் சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிரானது.

பொங்கல் பரிசு வழங்கும் இடங்களில் அதிமுக பேனர்: உடனடியாக அகற்றக்கோரி அரசு செயலாளர்களுக்கு திமுக கடிதம்!

இது நீதிமன்ற அவமதிப்பாகும்.எதனை நேரடியாக செய்யக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதோ அதனை மறைமுகமாகவும் செய்யக்கூடாது. சென்னை உயர்நீதிமன்றம் பேனர்கள் வைப்பதனை வரை முறைப்படுத்துவது தொடர்பான உத்தரவுகளை தமிழக அரசு அதிகாரிகள் செயல்படுத்தவில்லை.

ஆகவே தமிழகம் முழுவதும் இலவச பொங்கல் பரிசு வழங்குவது குறித்து அதிமுகவினர் வைத்துள்ள பேனர்களை உடனடியாக அகற்ற திமுக சார்பில் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்பி கோரிக்கை.

banner

Related Stories

Related Stories