தமிழ்நாடு

கடன் கொடுக்காமல் ஏமாற்றும் மோடி அரசு; வியாபாரத்தை கைவிட்ட 10,000 சாலையோர வியாபாரிகள் - உச்சபட்ச சாடிஸம்!

பித்தலாட்ட விளம்பரங்களுக்காக அரசு கஜானாவை கரைப்பதும் உச்ச பட்ச சாடிஸம்” என தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கடன் கொடுக்காமல் ஏமாற்றும் மோடி அரசு; வியாபாரத்தை கைவிட்ட 10,000 சாலையோர வியாபாரிகள் - உச்சபட்ச சாடிஸம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சாலையோர வியாபாரிகள் சமூக பொருளாதார மேம்பாட்டினைக் கருத்தில் கொண்டு, பி.எம் ஸ்வநிதி திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்குவதாக மத்திய அரசு அறிவித்தது. நாடு முழுவதும் இந்த திட்டங்களை தடாலடியாக அறிவித்த மோடி அரசு, முறையாக கடன் உதவிகளை வழங்குவதில்லை என வியாபாரிகள் வேதனையுடன் தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக, கொரோனா காலத்தில் தொழில் முடங்கியதால் பி.எம் ஸ்வநிதி திட்டத்தின் கீழ் கடன் பெற நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான சாலையோர வியாபாரிகள் விண்ணப்பித்து இருந்தனர். ஆனால், அவர்களில் பாதி பேருக்குக் கூட கடன் உதவி கிடைக்கவில்லை என்ற அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில், சென்னையில் மட்டும் பி.எம் ஸ்வநிதி திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த 80% சாலையோர வியாபாரிகளுக்கு கடனுதவி இன்னும் கிடைக்கவில்லை என தெரிய வந்துள்ளது. முன்னதாக சென்னை மாநகராட்சி, பொதுத்துறை வங்கிகள் விண்ணப்பித்தவர்களுக்கு 10 நாட்களில் கடன்களை வழங்குமாறு அறிவுறுத்தியிருக்கிறது.

கடன் கொடுக்காமல் ஏமாற்றும் மோடி அரசு; வியாபாரத்தை கைவிட்ட 10,000 சாலையோர வியாபாரிகள் - உச்சபட்ச சாடிஸம்!

அதனைத்தொடர்ந்து கடந்த 29ம் தேதி சென்னை ரிப்பன் மாளிகையில், வங்கி அதிகாரிகளின் சந்திப்புக் கூட்டம் நடந்துள்ளது. அப்போது பேசிய சென்னை ஆணையர் பிரகாஷ் கூறுகையில், ”17,000 சாலையோர வியாபாரிகளுக்கு 10 நாட்களில் கடன் வழங்கப்படும்” என்று உறுதியளித்தார். தொற்றுநோய் பரவலின் போது பெரும்பாலான வங்கி கிளைகள் கடன்களை வழங்கத் தவறிவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் பி.எம் ஸ்வநிதி திட்டத்தின் பயனாளிகளில் வெறும் 20% பேருக்கு மட்டுமே வங்கிகள் கடன்களை வழங்கியுள்ளன என மாநகராட்சி இணை ஆணையர் மேகனாத ரெட்டி தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாது 10 நாட்களில் வங்கிகள் வழங்கவேண்டிய கடனுக்கு 30 நாட்கள் மேல் அவகாசம் எடுத்துக்கொண்டதாகவும், இதில், கொரோனா ஊரடங்கால் 10,000 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்களது தொழிலை விட்டு வெளியேறியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

கடன் கொடுக்காமல் ஏமாற்றும் மோடி அரசு; வியாபாரத்தை கைவிட்ட 10,000 சாலையோர வியாபாரிகள் - உச்சபட்ச சாடிஸம்!

இந்நிலையில் இதுதொடர்பாக தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “கொரோனா பேரிடரின் போது சென்னையில் பி.எம் ஸ்வநிதி கடனுதவிக்காக விண்ணப்பித்த 3,835 சாலையோர வியாபாரிகளில் வெறும் 20% பேருக்கே கடன் கிடைத்துள்ளது ; 10000 பேர் தொழிலை விட்டுள்ளனர். நிதி அமைச்சர் அறிவித்த 20 லட்சம் கோடியும் வரவில்லை - கொண்டைக்கடலையும் வரவில்லை என்பதையே இது காட்டுகிறது.

ஏற்கனவே கோவை போன்ற தொழில் நகரங்களில் பல பெரிய நிறுவனங்கள் முடங்கிவிட்டன. தமிழகத்தை வழக்கம் போல மத்திய அரசு கண்டு கொள்ளாமல் இருப்பதும் - அவர்களிடம் போராடி உதவி பெற வேண்டிய அடிமைகள், பித்தலாட்ட விளம்பரங்களுக்காக அரசு கஜானாவை கரைப்பதும் உச்சபட்ச சாடிஸம்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories