தமிழ்நாடு

“குழந்தைகள் மற்றும் சிறுவர்களை அதிகம் பாதிக்கும் புதிய நோய்த் தொற்று”: நீலகிரி - கேரளா எல்லையில் பதற்றம்!

நீலகிரி எல்லையில் அமைந்துள்ள கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் குழந்தைகள் மற்றும் சிறுவர்களை அதிகம் பாதிக்கும் ஷிகெல்லா பாக்டீரியா நோய்த் தொற்று பரவி வருவதால் எல்லையில் அச்சம் உருவாகியுள்ளது.

“குழந்தைகள் மற்றும் சிறுவர்களை அதிகம் பாதிக்கும் புதிய நோய்த் தொற்று”: நீலகிரி - கேரளா எல்லையில் பதற்றம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழகம் - கேரளா ஆகிய இரு மாநில எல்லையில் அமைந்துள்ளது நீலகிரி மாவட்டம் ஆகும். நீலகிரி மாவட்ட எல்லையில் அமைந்துள்ள கீழ் நாடுகாணி அடுத்த கேரளா மாநிலம் கோழிக்கோடு பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிய பாக்டீரியா நோய்த் தொற்று உருவாகியுள்ளது.

இதில் குறிப்பாக குழந்தைகள் மற்றும் சிறுவர்களை அதிகமாக இந்த பாக்டீரியா பாதிக்கப்படுகின்றன. மேலும், இந்த நோய் காய்ச்சல், வயிற்றுப்போக்கு ஆகிய அறிகுறிகளைக் கொண்டு வருகின்றன. இதனால் கேரளா மாநிலத்தில் 16 வயது சிறுவர் ஒருவர் உயிரிழந்த நிலையில், 23 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு கோழிக்கோடு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இதுகுறித்து கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா அளித்துள்ள அறிக்கையில், நீர் மற்றும் உணவுப் பொருட்கள் மூலம் இந்த ஷிகெல்லா பாக்டீரியா எனும் நோய் ஏற்படுவதாக தெரிய வந்துள்ளதாகவும் இதுகுறித்த பாதுகாப்பு நடவடிக்கையில் சுகாதாரத் துறையினர் ஆலோசனை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

“குழந்தைகள் மற்றும் சிறுவர்களை அதிகம் பாதிக்கும் புதிய நோய்த் தொற்று”: நீலகிரி - கேரளா எல்லையில் பதற்றம்!

இந்நிலையில், கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை ஒட்டியுள்ள தமிழக எல்லைப் பகுதியான நீலகிரி மாவட்டம் கீழ நாடுகாணி பகுதியில், இந்த நோய் பரவ வாய்ப்புள்ளதாகவும் இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

இதனையடுத்து இதுகுறித்து நீலகிரி சுகாதாரத்துறை துணை இயக்குனர் பாலுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த பாக்டீரியா நோயானது நீர் மூலமாகவும், உணவுப் பொருட்கள் மீது பூச்சிக்கொல்லி மருந்துகள் எடுப்பதன் மூலமும் இந்த பாக்டீரியா நோய் பரவும் வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் ஓரிரு நாட்களில் இந்த தொற்று குறித்து கேரளா அரசு கண்டறிந்த பின்னரே முழு நிலவரம் தெரியவரும் என்றார். இருப்பினும் கேரளா எல்லையில் இருந்து நீலகிரிக்கு பரவாமல் இருக்க மருத்துவ துறை சார்பில் மருத்துவ குழுவினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories