தமிழ்நாடு

உச்சத்தை எட்டும் உட்கட்சி பூசல்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தோற்பது நிச்சயம் - அ.தி.மு.க எம்.எல்.ஏ சூசகம்!

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விருதுநகர் மாவட்டத்தில் எந்தத் தொகுதியில் நின்றாலும் தோற்பது நிச்சயம் என சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மன் தெரிவித்துள்ளார்.

உச்சத்தை எட்டும் உட்கட்சி பூசல்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தோற்பது நிச்சயம் - அ.தி.மு.க எம்.எல்.ஏ சூசகம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடக்கவுள்ள நிலையில், அரசியல் கட்சியினர் பல்வேறு தேர்தல் பணிகளை மேற்கொண்டுள்ளனர். கட்சி சார்பில் ஆலோசனைக் கூட்டம் செயல் வீரர்கள் கூட்டம் என நடைபெற்று வருகிறது.

சாத்தூரில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் கூட்டத்தில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மன், அமைச்சர் தன்னை கொலை மிரட்டல் விடுத்ததாகவும் இதுகுறித்து ஆடியோ ஆதாரம் தன்னிடம் உள்ளதாகவும் தேவைப்பட்டால் பெற்றுக்கொள்ளலாம் இதுகுறித்து தலைமை கழகத்திடம் புகார் அளிக்க உள்ளதாகவும் எனவும் தெரிவித்தார்.

மேலும், விருதுநகர் மாவட்டத்தில் 4 தொகுதிகளில் அ.தி.மு.க தாக்கப்பட்டதற்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி காரணம். அதனால் அமைச்சர் விருதுநகர் மாவட்டத்தில் எந்த தொகுதியில் தேர்தலில் போட்டியிட்டாலும் தோற்பது நிச்சயம் என பேசியுள்ளார்.

உச்சத்தை எட்டும் உட்கட்சி பூசல்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தோற்பது நிச்சயம் - அ.தி.மு.க எம்.எல்.ஏ சூசகம்!

கடந்த  செப்டம்பர் மாதம் சாத்தூர் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூலிப்படை வைத்து தன்னை கொலை செய்து விடுவதாக பேசியிருந்தார். பேசிய சில நாட்களில் முதல் அமைச்சர் வருகை தந்து பேச்சுவார்த்தை நடத்தி அதனடிப்படையில் இருவரும் சேர்ந்து பல்வேறு கூட்டங்களில் கலந்து கொண்டனர்.

தற்போது சட்டமன்ற உறுப்பினர் மீண்டும் அமைச்சர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். சட்டமன்ற உறுப்பினரின் இத்தகைய குற்றச்சாட்டு விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது என்பது குறிபிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories