தமிழ்நாடு

“கூலிப்படையை ஏவி கொன்று விடுவதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மிரட்டுகிறார்” : அ.தி.மு.க MLA குற்றச்சாட்டு!

தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூலிப்படையை ஏவி தன்னை கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுப்பதாக அ.தி.மு.க எம்.எல்.ஏ குற்றம்சாட்டியுள்ளார்.

“கூலிப்படையை ஏவி கொன்று விடுவதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மிரட்டுகிறார்” : அ.தி.மு.க MLA குற்றச்சாட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டமன்ற தொகுதி ஆலோசனைக் கூட்டம் நேற்று இரவு அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன் தலைமையில் நடைபெற்றது.

அந்தக் கூட்டத்தில், விருதுநகர் மாவட்ட கழகப் பொறுப்பாளரும் பால்வளத்துறை அமைச்சருமான ராஜேந்திர பாலாஜியின் பெயர் மற்றும் புகைப்படம் புறக்கணிப்பட்டதால், அ.தி.மு.க தொண்டர்களிடையே சலசலப்பு ஏற்பட்டது.

இதனிடையே, அந்தக் கூட்டத்தில் பேசிய சாத்தூர் அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மன், தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூலிப்படையை ஏவி தன்னை கொலை செய்துவிடுவதாக மிரட்டல் வருகிறது என்று குற்றம்சாட்டினார்.

“கூலிப்படையை ஏவி கொன்று விடுவதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மிரட்டுகிறார்” : அ.தி.மு.க MLA குற்றச்சாட்டு!

அதைத் தொடர்ந்து இன்று சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மன் மீது கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படும் தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

banner

Related Stories

Related Stories