தமிழ்நாடு

“மக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கைகள் அனைத்தும் தி.மு.க ஆட்சியில் நிறைவேற்றப்படும்”: AKS விஜயன் உறுதி!

“மக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கைகள் அனைத்தும் தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் நிறைவேற்றப்படும்” என தி.மு.க மாநில விவசாய அணி செயலாளர் ஏ.கே.எஸ் விஜயன் தெரிவித்துள்ளார்.

“மக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கைகள் அனைத்தும் தி.மு.க ஆட்சியில் நிறைவேற்றப்படும்”: AKS விஜயன் உறுதி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தென்காசி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட கடையநல்லூர் சட்டமன்ற தொகுதியில்,‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்ற தேர்தல் பரப்புரையை தி.மு.க மாநில விவசாய அணி செயலாளர் ஏ.கே.எஸ் விஜயன் இன்று நான்காவது நாளாக பிரச்சாரத்தை தொடங்கினார்.

இந்நிலையில் தென்காசி தெற்கு மாவட்டத்தில் மூன்றாவது நாள் பிரச்சாரம் முடிவுற்ற நிலையில், இன்று தென்காசியில் ஏ.கே.எஸ் விஜயன் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற பிரச்சார பயணத் திட்டத்தின் கீழ் தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட தென்காசி ஆலங்குளம், சங்கரன்கோவில் ஆகிய சட்டமன்ற தொகுதியில் கடந்த மூன்று நாட்களாக பொதுமக்களை சந்தித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறேன்.

செல்கின்ற இடமெல்லாம் பொதுமக்கள் ஆளுகின்ற ஆட்சியின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறி ஆயிரக்கணக்கான மனுக்களை எங்களிடம் அளித்துள்ளனர். இதில் குறிப்பாக நூறு நாள் வேலைத் திட்டம் சிறப்பாக செயல்படவில்லை, மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு சுழல்நிதி வழங்கவில்லை, தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு போதிய ஊதியம் இல்லை, மண்பாண்ட தொழிலாளர்கள் மண் எடுப்பதில் சிரமம் உள்ளது, காவல்துறையால் அதிக கெடுபிடி உள்ளிட்ட கோரிக்கைகள் அதிகமாக மக்களிடம் இருந்து வரப்பட்டுள்ளது.

அதுபோன்று ராமநதி, கருப்பாநதி மற்றும் அடவிநயினார் ஆகிய அணைகளை தூர்வார வேண்டும் என பெரும்பாலான விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை அடங்கிய மனுக்கள் அனைத்தும் மாவட்ட செயலாளர்கள் மூலம் மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

அதோடு மட்டுமல்லாமல் முக்கியமான பிரச்சனைகள் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினிடம் கொண்டுசெல்லப்பட்டு தேர்தல் அறிக்கையாக முன்வைக்கப்படும். பிரச்சார பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்த போது, மக்கள் மத்தியில் தி.மு.கவிற்கு நல்ல வரவேற்பு உள்ளது.

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக வேண்டும் அதற்கு வாக்களிக்க தயாராக இருப்பதாக பெண்கள் கூறுகின்றனர். எனவே மக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கைகள் அனைத்தும் தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் நிறைவேற்றப்படும்” என தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories