தமிழ்நாடு

"மக்களுக்கு இடைஞ்சல் தரும் சுங்கச்சாவடிகளை அகற்றும் வரை போராட்டம் தொடரும்!” - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

"மக்களுக்கு இடைஞ்சல் தரும் சுங்கச்சாவடிகளை அகற்றும் வரை போராட்டம் தொடரும்” என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

"மக்களுக்கு இடைஞ்சல் தரும் சுங்கச்சாவடிகளை அகற்றும் வரை போராட்டம் தொடரும்!” - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

விதிமுறைகளை மிறி செயல்படும் சுங்கச்சாவடிகளை அகற்றக் கோரி சோழிங்கநல்லூரில் உள்ள சுங்கச்சாவடி அருகே தி.மு.க சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னையின் துரைப்பாக்கம், பெருங்குடி, அக்கரை, போரூர் போன்ற இடங்களில் உள்ள சுங்கச்சாவடிகள் விதிகளுக்குப் புறம்பாக செயல்பட்டு, மக்களிடம் அதிக பணம் வசூல் செய்து வருவதைக் கண்டித்து, சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளர் மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ தலைமையில் இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

"மக்களுக்கு இடைஞ்சல் தரும் சுங்கச்சாவடிகளை அகற்றும் வரை போராட்டம் தொடரும்!” - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

விதிகளுக்குப் புறம்பான சுங்கச்சாவடிகளை அகற்றக் கோரி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாநிதி மாறன், தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்ட தி.மு.க நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

இதுகுறித்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ள தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், “சட்ட விதிகளை மீறி, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 8 இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றை அகற்ற வலியுறுத்தி சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் எழுச்சியுடன் நடைபெற்றுள்ளது.

"மக்களுக்கு இடைஞ்சல் தரும் சுங்கச்சாவடிகளை அகற்றும் வரை போராட்டம் தொடரும்!” - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

மாவட்டக் கழகச் செயலாளர் மா.சுப்பிரமணியன் ஏற்பாட்டில் நடந்த ஆர்ப்பாட்டம் இந்த ஆட்சி மீதான மக்களின் கோபத்தைக் காட்டுகிறது. மக்களுக்கு இடைஞ்சல் தரும் சுங்கச்சாவடிகளை அகற்றும் வரை போராட்டம் தொடரும்!” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories