தமிழ்நாடு

“8 வழிச்சாலை திட்டத்துக்காக கையகப்படுத்திய நிலத்தை ஒப்படைக்க வேண்டும்” - உச்ச நீதிமன்றம் உத்தரவு!

சென்னை - சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த தடையில்லை. ஆனால் உரிய வழிமுறைகளுடன் புதிய அறிவிக்கையை உருவாக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

 “8 வழிச்சாலை திட்டத்துக்காக கையகப்படுத்திய நிலத்தை ஒப்படைக்க வேண்டும்” - உச்ச நீதிமன்றம் உத்தரவு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை சேலம் இடையே 276 கி.மீ., தொலைவிற்கு 8 வழிச்சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்காக 1,900 ஹெக்டேர் நிலத்தை கையகப்படுத்தத் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

ஆனால் இதற்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்தது.

இதனை எதிர்த்து சேலம் - சென்னை எட்டுவழிச் சாலை திட்ட இயக்குனர் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி ஏ.எம். கான்வில்கர் தலைமையிலான அமர்வு முன்பு விசாரிக்கப்பட்டது.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

வழக்கு தொடர்பான அனைத்து விசாரணைகளும் அக்டோபர் 1ம் தேதியோடு முடிவடைந்தது. இதனை அடுத்து இன்று எட்டு வழிச்சாலை திட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

அதில், எட்டு வழிச்சாலை திட்டத்துக்காக சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் நிலம் கையகப்படுத்தியது தவறு. ஆகவே கையகப்படுத்திய நிலங்களை ஒப்படைக்க வேண்டும்.

சென்னை உயர் நீதிமன்றம் விதித்த தீர்ப்பை உறுதிபடுத்திய உச்ச நீதிமன்றம், உரிய வழிமுறைகளுடன் புதிய அறிவிக்கை வெளியிட்டு 8 வழிச்சாலை திட்டத்தை தொடரலாம் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories