தமிழ்நாடு

“ஊர் மக்களை பாதுகாக்க தங்கள் உயிரைப் பறிக்கொடுத்த மின்வாரிய ஊழியர்கள்” : காஞ்சிபுரம் அருகே நடந்த சோகம்!

காஞ்சிபுரம் அருகே மின்சார ஒயரை பழுது பார்க்க சென்ற மின்வாரிய ஊழியர் மற்றும் அவரது உதவிக்கு சென்றவர் என இருவர் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

“ஊர் மக்களை பாதுகாக்க தங்கள் உயிரைப் பறிக்கொடுத்த மின்வாரிய ஊழியர்கள்” : காஞ்சிபுரம் அருகே நடந்த சோகம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

காஞ்சிபுரம் மாவட்டம் அரக்கோணம் சாலையில் அமைந்துள்ள ஈஞ்சம்பாக்கம் கிராமத்தில், நள்ளிரவு மின்சார ஒயர் துண்டிக்க பட்டுள்ளதாக வந்த தகவல் மின்வாரிய அலுவலகத்திற்கு வந்துள்ளது.

தகவலின்பேரில், மக்கள் யாரும் தெரியாமல் அந்த வழியாக வருவதற்குள், மின்சார ஓயரை பழுது பார்க்கவேண்டும் என எண்ணி மின்சார வாரிய ஊழியர் பாக்கியநாதன் அவசர அவசர ஈஞ்சம்பாக்கத்திற்கு சென்றுள்ளார்.

அங்கு தயாளன் என்பவரை தனக்கு உதவியாக அழைத்துக்கொண்டு வயல்வெளிக்கு சென்றுள்ளார். அப்போது வயலில் இருந்த மின்சாரம் டிரான்ஸ்பார்மரை சரி செய்ய வயலுக்குள் இறங்கியுள்ளனர்.

“ஊர் மக்களை பாதுகாக்க தங்கள் உயிரைப் பறிக்கொடுத்த மின்வாரிய ஊழியர்கள்” : காஞ்சிபுரம் அருகே நடந்த சோகம்!
தயாளன் & பாகியநாதன்

அப்போது மின்சார ஓயரில் இருந்த மின்சாரம் வயல்வெளி முழுவதும் பரவி இருந்த நிலையில் பாக்கியநாதன், தயாளன் இருவரும் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்து உள்ளனர்.

மின்சார ஒயரை சரிசெய்ய சென்றவர்கள் திரும்பி வராததால் தயாளனின் தம்பி கோபி அவர்களை பார்க்க சென்றுள்ளார். அங்கு இருவரும் உயிரிழந்தவர் கண்டு மின்வாரியத்திற்கு தகவல் அளித்துள்ளார். தகவலின்பேரில் மின்வாரிய ஊழியர்களும் பாலுசெட்டி சத்திரம் போலிஸாரும் காஞ்சிபுரம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவம் குறித்து பாலுசெட்டி சத்திரம் போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். ஊர் மக்களை பாதுகாக்க தங்களின் உயிரை மின் ஊழியர்கள் கொடுத்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories