தமிழ்நாடு

“மோடி அரசுக்கு ஒத்து ஊதும் அதிமுக அரசை தூக்கி எறிய மக்கள் தயாராக இருக்கிறார்கள்”: தமிழச்சி தங்கபாண்டியன்!

தி.மு.க ஆட்சியில் சிறப்பாக செயல்பட்டு வந்த மகளிர்சுய உதவி குழு, கடந்த 10 வருடங்களாக அ.தி.மு.க ஆட்சியில் அதலபாதளத்திற்கு சென்றுவிட்டது என தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி குற்றம் சாட்டினார்.

“மோடி அரசுக்கு ஒத்து ஊதும் அதிமுக அரசை தூக்கி எறிய மக்கள் தயாராக இருக்கிறார்கள்”: தமிழச்சி தங்கபாண்டியன்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் “விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்” பிரச்சார பயணத்தை தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் தெற்கு மாவட்ட செயலாளர் மா.சுப்ரமணியம் துவங்கினர்.

தமிழகம் முழுவதும் “விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்” பிரச்சார பயணம் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக தென்சென்னை தி.மு.க சார்பில் பிரச்சார பயணத்தை தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் விருகம்பாக்கத்தில் மகளிர் சுய உதவி குழு ஊக்குநர்கள் மற்றும் பிரதநிதிகளுடம் சந்தித்து அவர்களுடைய குறைகளை கேட்டு அறிந்தார்.

மகளிர் சுய உதவி குழுவினருடன் தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் காலை சிற்றுண்டி அருந்தினார். அதனை தொடர்ந்து கோயம்பேடு பழ மற்றும் காய் மார்க்கெட் ஆய்வு செய்தார். அங்கு இருக்கும் வியாபாரிகளிடம் பிரச்சாரம் மேற்ககொண்டு, அவர்களுடைய குறைகளை நேரில் கேட்டு அறிந்தார்.

“மோடி அரசுக்கு ஒத்து ஊதும் அதிமுக அரசை தூக்கி எறிய மக்கள் தயாராக இருக்கிறார்கள்”: தமிழச்சி தங்கபாண்டியன்!

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி, “தி.மு.க ஆட்சியில் சிறப்பாக செயல்பட்டு வந்த மகளிர்சுய உதவி குழு, கடந்த 10 வருடங்களாக அ.தி.மு.க ஆட்சியில் அதலபாதளத்திற்கு சென்றுவிட்டது. வியாபாரிகளின் முன்னேற்றத்திற்காக தி.மு.க ஆட்சியில் கட்டப்பட்ட கோயம்பேடு மார்கெடில், இன்று எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லாததால், வியாபாரிகள் மிகுந்த பாதிப்புகளை சந்திக்கின்றனர்.

கடந்த 10 ஆண்டுகளில் விருங்கம்பாக்கம் தொகுதியில் அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் மக்களுக்குக்காக எந்த பணியும் செய்யவில்லை என்பதால், தி.மு.க ஆட்சிக்கு வர வேண்டும் மக்கள் என்னுகிறார்கள். அ.தி.மு.க அரசு, மோடி அரசுக்கு ஒத்து ஊதும் அரசாக இருக்கிறது.

விவாசயிகள், கூலி தொழிலாளி, பெண்கள், வேலை செய்யும் இளைஞர்கள் என யாரும் அ.தி.மு.க ஆட்சியில் மகிழ்ச்சியாக இல்லை. மக்கள் அ.தி.மு.க ஆட்சியை தூக்கி எறிய தயாராக உள்ளனர்” எனத் தெரிவித்தார்.

“மோடி அரசுக்கு ஒத்து ஊதும் அதிமுக அரசை தூக்கி எறிய மக்கள் தயாராக இருக்கிறார்கள்”: தமிழச்சி தங்கபாண்டியன்!

இதை தொடர்ந்து கலைஞர் நகரிலுள்ள தியாகி அரங்கநாதன் குடும்பத்தினரை சந்தித்து பேசினார். பிரச்சார பயணத்தின் தொடர்ச்சியாக நெசப்பாக்கத்திலுள்ள சத்யா நகரை ஆய்வு செய்து மக்களுடைய குறைக்களை கேட்டு அறிந்தார்.

‌தி.மு.க தெற்கு மாவட்டம் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் தனசேகர், வர்த்தக அணி செயலாளர் காசிமுத்து மணிக்கம், இளைஞரணி அமைப்பாளர் பிரபாகர் ராஜா ஆகியோர் உடன் இருந்தனர்.

banner

Related Stories

Related Stories