தமிழ்நாடு

“மக்களை ஏமாற்றும் அதிமுக- பாஜக கூட்டணிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்”: பரப்புரையில் ஐ.லியோனி விளாசல்!

”தமிழ் பண்பாட்டையும் தமிழ் மொழியையும் பாதுகாக்கும் ஒரே இயக்கம் தி.மு.கதான்” என ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ பிரச்சார கூட்டத்தில் தி.மு.க கொள்கை பரப்புச் செயலாளர் ஐ.லியோனி தெரிவித்துள்ளார்.

“மக்களை ஏமாற்றும் அதிமுக- பாஜக கூட்டணிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்”: பரப்புரையில் ஐ.லியோனி விளாசல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் நாங்குநேரி, ராதாபுரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் தி.மு.க கொள்கை பரப்புச் செயலாளர் திண்டுக்கல் ஐ.லியோனி கடந்த 3 நாட்களாக ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்ற பயணத் திட்டத்தின் கீழ் பொதுமக்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், கழக நிர்வாகிகளை சந்தித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

மூன்றாவது நாளாக ராதாபுரம் தொகுதிக்கு உட்பட்ட வள்ளியூர் ராதாபுரம், காவல் கிணறு உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். தொடர்ந்து கூடங்குளம் வந்த அவர் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முகப்பில் அமைந்துள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து கூடங்குளத்தில் பொதுமக்களுடன் கலந்துரையாடினார்.

இந்த நிகழ்ச்சியில், அ.தி.மு.க உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி நூற்றுக்கும் மேற்பட்டோர் தி.மு.க கொள்கை பரப்புச் செயலாளர் ஐ.லியோனி முன்னிலையில் தி.மு.கவில் இணைந்தனர். இதனையடுத்து மீனவ கிராமமான இடிந்தகரையில் மீனவர்களுடன் கலந்துரையாடினார்.

“மக்களை ஏமாற்றும் அதிமுக- பாஜக கூட்டணிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்”: பரப்புரையில் ஐ.லியோனி விளாசல்!

பின்னர் திசையன்விளையில் நடந்த கூட்டத்தில் பல்வேறு சமுதாய மக்களைச் சந்தித்து கலந்துரையாடினார். இதனையடுத்து அவர் கூட்டத்தில் பேசுகையில், “திசையன்விளை, நாங்குநேரி உள்ளிட்ட பகுதிகளில் வறட்சியான நிலங்களை வளமாக்கும் வகையில் கடந்த 2009-ஆம் ஆண்டு தி.மு.க தலைவர் கலைஞர் அவர்களால் தாமிரபரணி ஆறு, நம்பியாறு, கருமேனியாறு இணைப்பு திட்டம் கொண்டுவரப்பட்டது.

அப்போது முதல் கட்ட பணிகள் முடிந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து நதிநீர் இணைப்பு திட்டப் பணிகள் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டு தற்போது ஆமை வேகத்தில் பணி நடக்கிறது. 2012-லேயே இந்த திட்டப்பணிகளை முடித்திருக்க வேண்டும். ஆனால் தற்போதைய ஆட்சியாளர்கள் அதுகுறித்து அக்கறை செலுத்தவில்லை.

தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் திட்டம் துரிதப்படுத்தப்பட்டு விரைந்து நதிநீர் இணைப்பு திட்டப்பணிகள் முடிக்கப்படும். தமிழ் பண்பாட்டையும் தமிழ் மொழியையும் பாதுகாக்கும் ஒரே இயக்கம் தி.மு.கதான். மாணவ சமுதாயத்தின் மீது அக்கறை கொண்டு கல்வியில் இட ஒதுக்கீட்டை தி.மு.க கொண்டு வந்ததன் காரணமாக பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் உயர் படிப்புகளுக்குச் செல்லும் நிலை உருவாகியுள்ளது.

“மக்களை ஏமாற்றும் அதிமுக- பாஜக கூட்டணிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்”: பரப்புரையில் ஐ.லியோனி விளாசல்!

ஏராளமானவர்கள் படித்துள்ள நிலையில், வேலைவாய்ப்பு என்பது தமிழகத்தில் கேள்விக்குறியாக உள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் ஆயிரத்து நூறு கோடி முதலீட்டை தமிழகத்திற்கு கொண்டு வந்து 90 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் எனத் தெரிவித்தார். ஆனால் இதுவரை ஒருவருக்கு கூட வேலை வழங்கவில்லை .

வாக்குறுதி அளித்துவிட்டு மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் அ.தி.மு.க பா.ஜ.க கூட்டணி உறவுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் விரைவில் முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். முதல்வராக பொறுப்பேற்ற உடன் நீட் தேர்வு ரத்து, புதிய கல்விக்கொள்கை ரத்து, முதியோருக்கு உதவித்தொகை மகளிர் சுய உதவி குழுக்களுக்கு சுழல் நிதி என மக்களுக்கு நன்மை தரும் அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படும்” எனத் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன், அவைத்தலைவர் அப்பாவு, மாநில தொண்டரணி துணை செயலாளர் ஆறுமுகம், ராதாபுரம் ஒன்றிய செயலாளர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ், மற்றும் கணேஷ்குமார் ஆதீத்தன், பொதுக்குழு உறுப்பின் ஜோசப் பெல்சி, மாணவரணி அமைப்பளர் ராமச்சந்திரன் உள்ளிட்ட தி.மு.கவினர் கலந்துகொண்டனர்.

banner

Related Stories

Related Stories