தமிழ்நாடு

“அதிமுக அரசை அகற்றுவதே மக்களின் முடிவு.. திமுக ஆட்சிக்கு வருவதை யாராலும் தடுக்க முடியாது” - தயாநிதி மாறன்

அ.தி.மு.க அரசை அகற்ற மக்கள் முடிவு செய்து விட்டார்கள், தி.மு.க ஆட்சிக்கு வருவதை யாராலும் தடுக்க முடியாது என மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தாயாநிதிமாறன் பேட்டியளித்துள்ளார்.

File image
File image
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை யானைகவுனி பகுதியில் ரயில்வே மேம்பால பணியை விரைந்து முடிக்கக்கோரி , ரயில்வே பொது மேலாளரை இன்று நேரில் சந்தித்து தயாநிதி மாறன் எம்.பி மனு அளித்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தயாநிதி மாறன், யானைகவுனி ரயில்வே மேம்பால பணியை தொடங்கி பின் , இதுவரை ஆமை வேகத்தில் பணிகள் நடந்து முழுமையான பணிகள் முடிவடையாததால் மக்கள் போக்குவரத்து நெரிசலில் தவிப்பதாகவும், அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் முழுமையாக முடிவடைய உள்ள பணியை ஜூன் மாதத்திற்குள் விரைந்து முடிக்க வலியுறுத்தியாகவும் கூறினார்.

கொளத்தூர் ராஜாஜி நகரில் ரயில்வே இடத்தில் குப்பைகள் தேங்கி இருப்பதாகவும் அதனால் தண்ணீர் தேங்கி , நோய்த் தொற்று பரவும் அபாயம் இருப்பதாகவும் , குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியதாக தயாநிதி மாறன் கூறினார்.

தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு சார்பில் தாம்பரம் நடைபாதை பணிகளை விரைந்து முடிக்கவும் அந்த கோரிக்கை மனுவில் குறிப்பிட்டுள்ளதாகவும் மக்களின் சிரமத்தைப் போக்க புறநகர் ரயில் சேவையை அதிகரிக்க வேண்டும் எனவும் தயாநிதிமாறன் பொது மேலாளரிடம் வலியுறுத்தியுள்ளதாகத் தெரிவித்தார்.

வேளாண் சட்ட மசோதாவால் விவசாயிகள் உரிமை பாதிக்கப்படுகிறது. விவசாயிகள் உரிமையை மீட்க தி.மு.க சார்பில் 5ம் தேதி போரட்டத்தை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். கொரோனா காலகட்டத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினும், தி.மு.கவினரும் பல இடங்களில் மக்களுக்கு நிவாரணங்களை வழங்கியதாகவும், மக்கள் அ.தி.மு.க அரசை அகற்ற முடிவு எடுத்துவிட்டார்கள், யார் வந்தாலும் திமுக ஆட்சிக்கு வருவதை தடுக்க முடியாது எனவும் தயாநிதிமாறன் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories