தமிழ்நாடு

கலைஞர் செய்திகள் எதிரொலி.. அருந்ததியின மக்களுக்கு பொதுவழியை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்த வருவாய் துறை!

திருவள்ளூர் அருகே அருந்ததியினர் சமூகத்தினர் படும் அவதி குறித்து கலைஞர் செய்திகளில் செய்தி ஒளிபரப்பியதால் ஒரே நாளில் அவர்களுக்கு நீதி கிடைத்ததாக பொதுமக்கள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துள்ளனர்.

கலைஞர் செய்திகள் எதிரொலி.. அருந்ததியின மக்களுக்கு பொதுவழியை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்த வருவாய் துறை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Premkumar
Updated on

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த பேரண்டூர் ஊராட்சிக்கு உட்பட்ட எல்லாம்பேட்டை சிற்றூராட்சியில், பல்வேறு வகுப்பைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இதேபகுதியில், அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த ஐந்து குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 50க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், 28ம் தேதி மாலை மூதாட்டி ஒருவர் உடல் நிலை சரியில்லாத காராணத்தால், மருத்துவமனைக்கு அழைத்து சென்று, திரும்பி வரும்போது அக்கிராமத்தில் உள்ள ஆதிக்க சாதியினர், அவர்களை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

மேலும், அவர்களது சாதிப்பெயரை சொல்லி தகாத வார்த்தைகளால் திட்டி அவர்களை ஊருக்குள் வரக்கூடாது; செருப்பு அணியக் கூடாது என மிரட்டி சாலையின் குறுக்கே முட்வேலியை போட்டு அடைத்துள்ளனர். இதனால் அருந்ததியின மக்கள் ஊருக்கு வெளியே செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருவதாக கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் செய்தி வெளியானது.

கலைஞர் செய்திகள் எதிரொலி.. அருந்ததியின மக்களுக்கு பொதுவழியை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்த வருவாய் துறை!

இதனைத் தொடர்ந்து மாவட்ட வருவாய் துறை உயரதிகாரிகள் அக்கிராமத்திற்கு சென்று அருந்ததியின மக்களுக்கு பொது வழியை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வழியை ஏற்படுத்தி வருகின்றனர்.

இதனால் அப்பகுதி மக்கள் தங்களது பல தலைமுறை பிரச்சனையாக இருந்த வழி பிரச்சனையை செய்தியாக்கு தீர்த்து வைத்த கலைஞர் தொலைக்காட்சிக்கு அருந்ததியின மக்கள் மனப்பூர்வமாக நன்றியை தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories