தமிழ்நாடு

நாளை உருவாகிறது புரெவி புயல்? அடுத்த 2 நாட்களுக்கு தென் தமிழகத்தில் அதி கனமழைக்கு வாய்ப்பு! 

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் புயலாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாளை உருவாகிறது புரெவி புயல்? அடுத்த 2 நாட்களுக்கு தென் தமிழகத்தில் அதி கனமழைக்கு வாய்ப்பு! 
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் , பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது.

தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த ஆறு மணி நேரத்தில் 10 கி்மீ வேகத்தில் நகர்ந்து தற்போது இலங்கையின் திருகோணமலைக்கு கிழக்கு தென் கிழக்கே 530 கிமீ தொலைவிலும் , கன்னியாகுமரிக்கு கிழக்கு தென் கிழக்கே 930கிமீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

நாளை உருவாகிறது புரெவி புயல்? அடுத்த 2 நாட்களுக்கு தென் தமிழகத்தில் அதி கனமழைக்கு வாய்ப்பு! 

இது அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுபெற்று மேற்கு திசையில் நகர்ந்து வருகின்ற நாளை மாலை அல்லது இரவு இலங்கை திரிகோணமலைக்கு அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து மேற்கு நோக்கி நகர்ந்து டிசம்பர் 3-ஆம் தேதி தென் தமிழகக் கடற்கரைப் பகுதியை நோக்கி நகரும்.

இதன் காரணமாக தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பாகதாகவும், குறிப்பாக டிசம்பர் 2, 3 தேதிகளில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் கன முதல் மிக கனமழைக்கும் ஒரு சில இடங்களில் அதிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக கடலோரப் பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

தென்கிழக்கு வங்கக் கடல் தென் மேற்கு வங்க கடல் இலங்கை கடற்பகுதி மன்னார் வளைகுடா குமரி கடல் மற்றும் இதற்கு தமிழக கேரள கடல் பகுதிகளுக்கு இன்று முதல் வருகிற 4ம் தேதி வரை மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories