தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 1,551 பேருக்கு கொரோனா.. இன்றும் 17 பேர் பலி.. மொத்த பாதிப்பு 7.73 லட்சமானது!

கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் மேலும் 1,557 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தில் புதிதாக 1,551 பேருக்கு கொரோனா.. இன்றும் 17 பேர் பலி.. மொத்த பாதிப்பு 7.73 லட்சமானது!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

புதிதாக 66 ஆயிரத்து 634 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் ஆண்கள் 944 பேருக்கும் பெண்கள் 613 பேருக்கும் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளி மாநிலங்களிலும் இருந்து வந்த 6 பேருக்கும் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அதில் சென்னையில் 469 பேருக்கும், கோவையில் 146, செங்கல்பட்டில் 90, சேலத்தில் 78, திருவள்ளூரில் 73, காஞ்சிபுரத்தில் 72, திருப்பூரில் 58 என அதிகபட்ச பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

இதனையடுத்து மொத்தமாக மாநிலத்தில் கொரோனாவால் இதுகாறும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7.73 லட்சத்து 176 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 17 பேர் கொரோனா தாக்கத்தால் உயிரிழந்ததை அடுத்து மொத்த பலி எண்ணிக்கை 11 ஆயிரத்து 639 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 1,910 பேர் டிஸ்சார்ஜ் ஆனதை அடுத்து மொத்தமாக குணமடந்தோரின் எண்ணிக்கை 7.49 லட்சத்து 662 ஆக உள்ளது. ஆகவே தற்போது 11 ஆயிரத்து 875 பேருக்கு கொரோனா சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

banner

Related Stories

Related Stories