தமிழ்நாடு

“தமிழகத்திற்கு துரோகம் செய்யும் அ.தி.மு.க அரசை பற்றித்தான் தி.மு.கவின் பிரச்சாரம் இருக்கும்” : கனிமொழி MP

நாடாளுமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 24 மாற்றுத்திறனாளிகளுக்கு இருசக்கர வாகனங்களை தூத்துக்குடி தி.மு.க எம்.பி கனிமொழி வழங்கினார்.

“தமிழகத்திற்கு துரோகம் செய்யும் அ.தி.மு.க அரசை பற்றித்தான் தி.மு.கவின் பிரச்சாரம் இருக்கும்” : கனிமொழி MP
  • Twitter
  • Facebook
  • WhatsApp
premjourn
Updated on

தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கக்கூடிய மாற்றுத்திறனாளிகள் தங்கள் பணிகளுக்குச் சென்று வரும் வகையில், இருசக்கர வாகனம் வாங்கி தரவேண்டுமென நாடாளுமன்ற தி.மு.க குழு துணைத் தலைவரும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி எம்.பி-யிடம் கோரிக்கை விடுத்தனர்.

இதைத் தொடர்ந்து தனது நாடாளுமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 24 மாற்றுத் திறனாளிகளுக்கு இருசக்கர வாகனங்கள் வாங்குவதற்கு நிதி ஒதுக்கினார் கனிமொழி எம்.பி. 16 லட்சம் ரூபாய் மதிப்பில் 24 இருசக்கர வாகனங்கள் வாங்கப்பட்ட நிலையில், இருசக்கர வாகனங்களை பயனாளிகளிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி தூத்துக்குடியில் நடைபெற்றது.

நாடாளுமன்ற தி.மு.க குழு துணைத் தலைவரும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி எம்.பி இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு இருசக்கர வாகனங்களை வழங்கினார். இதைத் தொடர்ந்து பேசிய கனிமொழி எம்.பி, “மாற்றுத்திறனாளிகளுக்கான தனித் துறையை உருவாக்கி அவர்கள் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கியவர் கலைஞர். தி.மு.க ஆட்சி ஏற்பட்டதும் அனைத்து நலத்திட்டங்களும் மாற்றுத்திறனாளிகளுக்கு கிடைக்க வழிவகை செய்யப்படும்.

“தமிழகத்திற்கு துரோகம் செய்யும் அ.தி.மு.க அரசை பற்றித்தான் தி.மு.கவின் பிரச்சாரம் இருக்கும்” : கனிமொழி MP

எடப்பாடி பழனிசாமி அரசு தமிழ்நாட்டின் உரிமைகளை கொச்சைப்படுத்தி விட்டுக்கொடுத்துக்கொண்டு இருக்கிறது. தமிழகத்திற்கு தொடர்ந்து துரோகம் செய்து கொண்டிருக்கும் அ.தி.மு.க அரசை பற்றித்தான் தி.மு.கவின் பிரச்சாரம் இருக்கும்.

தி.மு.கவின் தேர்தல் அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது. அதில் மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் இடம்பெறும். தி.மு.க தேர்தல் அறிக்கையில் உறுதியளிக்கப்படும் அனைத்து திட்டங்களும் தி.மு.க ஆட்சி ஏற்பட்டவுடன் நிறைவேற்றப்படும்” எனவும் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories