தமிழ்நாடு

10 நாட்களுக்கும் மேலாக முறையாக குடிநீர் விநியோகிக்காமல் வதைத்த நிர்வாகம் : பொதுமக்கள் சாலை மறியல்!

குடிநீர் வழங்கப்படாததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

10 நாட்களுக்கும் மேலாக முறையாக குடிநீர் விநியோகிக்காமல் வதைத்த நிர்வாகம் : பொதுமக்கள் சாலை மறியல்!
Vignesh
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

திருச்செந்தூர் அருகே முறையாக குடிநீர் வழங்கப்படாததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே பரமன்குறிச்சி ஊராட்சியில் 2000-ற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதி மக்களுக்கு எல்லப்ப நாயக்கர் குளத்திலிருந்து குடிநீர் வழங்கப் பட்டு வருகிறது. கடந்த 10 நாட்களுக்கும் மேலாக இப்பகுதி மக்களுக்கு முறையாக குடிநீர் விநியோகம் வழங்கப்படாதது மக்களை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது.

இந்நிலையில் இன்று பொதுமக்கள் காலி குடங்களுடன் திருச்செந்தூர் கோவில் சாலையில் உள்ள பரமன்குறிச்சி ரவுண்டானாவில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர் பொதுமக்களை கலைந்து செல்லுமாறு அறிவுவறுத்தினர்.

அதற்கு பொதுமக்கள் மறுப்பு தெரிவித்ததால் காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. முறையான குடிநீர் விநியோகம் வழங்க உறுதி அளிக்கப்பட்டதை அடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

banner

Related Stories

Related Stories