தமிழ்நாடு

புதுச்சேரியில் முத்தமிழறிஞர் கலைஞர் பெயரில் காலை சிற்றுண்டித் திட்டம்: ஆர்.எஸ்.பாரதி MP தொடக்கி வைத்தார்!

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அரசு பள்ளிகளில் முத்தமிழறிஞர் கலைஞர் பெயரில் காலை சிற்றுண்டித் திட்டம் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் முத்தமிழறிஞர் கலைஞர் பெயரில் காலை சிற்றுண்டித் திட்டம்: ஆர்.எஸ்.பாரதி MP தொடக்கி வைத்தார்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கடந்த ஜூலை மாதம் பட்ஜெட் தாக்கல் செய்தபோது, ''புதுச்சேரியில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிக் குழந்தைகளுக்கு தற்போது காலையில் பால் தரப்படுகிறது. இது விரிவுபடுத்தப்பட்டு முத்தமிழறிஞர் கலைஞர் சிற்றுண்டித் திட்டம் அமல்படுத்தப்படும்.

இதன்படி சிற்றுண்டியில் இட்லி, பொங்கல், கிச்சடி வழங்கப்படும். பால், பிஸ்கெட் திட்டம் ராஜீவ் பெயரிலும், காலை சிற்றுண்டித் திட்டம் முத்தமிழறிஞர் கலைஞர் பெயரிலும் இருக்கும்'' என்று அறிவித்தார்.

அதன்படி முத்தமிழறிஞர் கலைஞர் சிற்றுண்டித் திட்டத்தின் கீழ் காலை உணவாக கேசரி, இட்லி, பொங்கல், சட்னி- சாம்பார் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி இன்று காலை புதுச்சேரி காராமனிக்குப்பம் ஜீவானந்தம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் முத்தமிழறிஞர் கலைஞர் பெயரில் காலை சிற்றுண்டித் திட்டம்: ஆர்.எஸ்.பாரதி MP தொடக்கி வைத்தார்!

இந்த சிறப்பு மிக்க திட்டத்தை, தி.மு.க அமைப்பு செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி துவக்கி வைத்தார். இந்த நிகழ்வில் மாநில முதல்வர் நாராயணசாமி தலைமை தாங்கினார்.

இந்த திட்டத்தின் படி, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பள்ளி மாணவர்களுக்கு இட்லி, பொங்கல், கிச்சடி, சாம்பார், சட்னி ஆகியவை வழங்கப்படுகிறது. மாகி பள்ளி மாணவர்களுக்கு உப்புமா, புட்டு, கடலை, உடைத்த கோதுமை உப்புமா சட்னி வழங்கப்படுகிறது. ஏனாம் பள்ளி மாணவர்களுக்கு உப்புமா, சட்னி, தக்காளி சாதம், சட்னி, கிச்சடி, சட்னி, உடைத்த கோதுமை உப்புமா சட்னி வழங்கப்படுகிறது.

இந்த திட்டம் அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் மழலையர் முதல் மேனிலை வகுப்பு படிக்கும் மாணவர்கள் வரை பயனடைவர். புதுச்சேரி மாநிலத்தில் உள்ள பள்ளிகள் அனைத்தும் முழமையாக இயங்க துவங்கிய பின்னர், அனைத்து மாணவர்களுக்கும் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

புதுச்சேரியில் முத்தமிழறிஞர் கலைஞர் பெயரில் காலை சிற்றுண்டித் திட்டம்: ஆர்.எஸ்.பாரதி MP தொடக்கி வைத்தார்!

இந்த திட்டத்திற்காக புதுச்சேரி அரசு, 12 கோடி ருபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அதுமட்டுமின்றி, கூடுதலாக 6 கோடி ருபாய் நிதி ஒதுக்கவும் மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டம் மூலம் நான்கு பிராந்தியங்களை சேர்ந்த 81,000 மாணவ, மாணவிகள் பயன்பெறுகின்றனர். நாட்டிலேயே முதன் முறையாக புதுச்சேரி மாநிலத்தில் இந்த காலை சிற்றுண்டி திட்டம் முன் மாதிரியாக திகழ்வது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக நிகழ்வின்போது டாக்டர் கலைஞரின் உருவப்படம் திறந்து வைத்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் இந்நிகழ்ச்சியில், சபாநாயகர் சிவக்கொழுந்து, கல்வி அமைச்சர் கமலக்கண்ணன், பொதுப்பணித் துறை அமைச்சர் நமச்சிவாயம், வருவாய் துறை அமைச்சர் ஷாஜகான், புதுச்சேரி நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம், தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் சிவா, புதுச்சேரி வடக்கு மாநில தி.மு.க அமைப்பாளர் சிவக்குமார், காரைக்கால் மாவட்ட தி.மு.க அமைப்பாளர் நாஜீம் கல்வித்துறை செயலர் அன்பரசு, இயக்குனர் ருத்ர கவுடு, உள்ளிட்ட அதிகாரிகள், தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி நிர்வாகிகள், பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்துக்கொண்டனர்.

banner

Related Stories

Related Stories