தமிழ்நாடு

நாளை முதல் அருங்காட்சியகங்கள் திறப்பு - வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு!

தமிழக அரசு அருங்காட்சியகங்களை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

நாளை முதல் அருங்காட்சியகங்கள் திறப்பு - வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

கடந்த மார்ச் மாதம் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கிற்குப் பிறகு சென்னை எழும்பூர் உட்பட தமிழகத்திலுள்ள 21 அருங்காட்சியகங்கள் நாளை திறக்கப்பட உள்ளன.

இந்நிலையில் தமிழக அரசு அருங்காட்சியகங்களை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அருங்காட்சியகத்தில் வழிகாட்டு நெறிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்ய கொரோனா பாதுகாப்பு குழு அமைக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அருங்காட்சியகங்களை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வருமாறு :

1) அருங்காட்சியகங்களுக்கு வரும் பார்வையாளர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.

2) அருங்காட்சியகங்களில் கொரோனா பாதுகாப்பு குழு அமைக்க வேண்டும். அரசு வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும்.

3) மூன்று மணி நேரத்துக்கு ஒரு முறை கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும்.

4) 23- 30 டிகிரி வரை குளிர்சாதன வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம்.

5) கூட்டம் கூடுவதைத் தவிர்க்கும் வகையில், பள்ளி கல்லூரி மாணவர்கள் மொத்தமாக வரும்பட்சத்தில், முன்கூட்டியே அவர்களுக்கான பார்வை நேரத்தை முன்பதிவு செய்ய வேண்டும்.

6) அருங்காட்சியகம் திறந்திருக்கும் நேரத்தை 30 நிமிடங்கள் வரை நீட்டித்துக்கொள்ளலாம்.

7) பார்வையாளர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனைகள் மேற்கொள்ள போதுமான அளவு தெர்மல் ஸ்கேனர் கருவிகள் வழங்க வேண்டும்.

8) உள்ளே வருவதற்கு ஒரு வழி, வெளியே செல்ல ஒரு வழி அமைக்க வேண்டும்.

9) அருங்காட்சியகங்களில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ள பொருட்கள், சிலைகளை தொடுவதை தவிர்க்க வேண்டும்.

10) அருங்காட்சியகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தினமும் உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். அவர்கள் முகக்கவசம் மற்றும் கையுறைகளை பயன்படுத்த வேண்டும், அவைகளை அவ்வப்போது மாற்றிக்கொள்ள வேண்டும்.

banner

Related Stories

Related Stories