தமிழ்நாடு

நெல்லை, குமரி உட்பட 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலெர்ட்.. 2 நாட்களுக்கு சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

அடுத்த 24 மணிநேரத்தில் 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிக கனமழையும், 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழையும் செய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நெல்லை, குமரி உட்பட 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலெர்ட்.. 2 நாட்களுக்கு சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

குமரிக்கடல் மற்றும் அதனையொட்டிய இலங்கைப் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், தூத்துக்குடி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மதுரை, சிவகங்கை, விருதுநகர், தென்காசி, புதுக்கோட்டை மற்றும் தேனி, திண்டுக்கல், கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களில் மலைப்பகுதிகளில் கனமழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

அடுத்த 48 (06.11.2020) மணி நேரத்தில் தேனி, திண்டுக்கல், கோயம்புத்தூர், திருப்பூர், மாவட்டங்களில் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும்

நெல்லை, குமரி உட்பட 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலெர்ட்.. 2 நாட்களுக்கு சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

அடுத்த 72 (07.11.2020) மணி நேரத்தில் தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், கடலூர், கள்ளக்குறிச்சி, காரைக்கால் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்ஸியசையும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்ஸியசையும் ஒட்டி பதிவாகக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்ஸியசையும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்ஸியசையும் ஒட்டி பதிவாகக்கூடும்.

banner

Related Stories

Related Stories