தமிழ்நாடு

“கிராம சபை முதல் டெல்லி வரை” : ஒலிம்பிக் சைக்கிள் போட்டிக்கு தேர்வான மாணவிக்கு ஊக்கம் தந்த கனிமொழி MP!

ஒலிம்பிக் சைக்கிள் போட்டி பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கபட்ட தூத்துக்குடியைச் சேர்ந்த ஸ்ரீமதிக்கு கனிமொழி எம்.பி வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

“கிராம சபை முதல் டெல்லி வரை” :  ஒலிம்பிக் சைக்கிள் போட்டிக்கு தேர்வான மாணவிக்கு ஊக்கம் தந்த கனிமொழி MP!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு 2019 பிப்ரவரி 24ம் தேதி அப்போதைய மாநிலங்களவை எம்.பியும், தி.மு.க மகளிரணிச் செயலாளருமான கனிமொழி தூத்துக்குடிக்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கச் சென்றிருந்தார்.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க சார்பாக நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்ட கனிமொழி எம்.பி அப்போது, கீழமுடிமண் என்ற கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீமதி என்ற மாணவிக்கு 5 லட்சம் மதிப்புள்ள ரேஸ் சைக்கிளை வழங்கினார்.

ஏற்கனவே, ஒட்டப்பிடாரம் அருகே நடந்த கிராமசபை கூட்டத்தின்போது கனிமொழி எம்.பியை சந்தித்த அந்த மாணவி, ‘நான் சைக்கிள் பந்தயங்களில் மாவட்ட, மாநில அளவில் பங்கேற்று சாதனை படைத்துள்ளேன். எனக்கு சர்வதேச அளவிலான சைக்கிள் போட்டிகளில் கலந்துகொள்ள நவீன ரேஸ் சைக்கிள் தேவைப்படுகிறது’ என்று கனிமொழி எம்.பி-யிடம் கோரிக்கை வைத்தார்.

“கிராம சபை முதல் டெல்லி வரை” :  ஒலிம்பிக் சைக்கிள் போட்டிக்கு தேர்வான மாணவிக்கு ஊக்கம் தந்த கனிமொழி MP!

அதை நினைவில் வைத்திருந்த கனிமொழி, மீண்டும் தான் தூத்துக்குடி சென்றபோது, அந்த மாணவியை வரவரழைத்து 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான சைக்கிளை ஸ்ரீமதிக்கு வழங்கி வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

இந்த சைக்கிள் மூலம் தனது பயிற்சியை மெருகேற்றிக் கொண்ட ஸ்ரீமதி, கடந்த வருடம் நவம்பர் மாதம் ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த 17 வயதுக்குட்பட்டோருக்கான தேசிய சைக்கிள் போட்டியில் கலந்துகொண்டு நான்காவது இடத்தைப் பிடித்தார்.

இதையடுத்து 17வயதுக்குட்பட்ட தேசிய சைக்கிள் போட்டிகளில் தொடர்ந்து பங்குபெற ஸ்ரீமதியை தேர்ந்தெடுத்துள்ள இந்திய விளையாட்டு ஆணையம், இதற்காக டெல்லி விடுதியில் தங்கி பயிற்சி பெற ஸ்ரீமதியை தேர்ந்தெடுத்துள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியை, கனிமொழி எம்.பியிடம் தெரிவித்து வாழ்த்து பெற்றார் ஸ்ரீமதி.

“கிராம சபை முதல் டெல்லி வரை” :  ஒலிம்பிக் சைக்கிள் போட்டிக்கு தேர்வான மாணவிக்கு ஊக்கம் தந்த கனிமொழி MP!

அப்போது, ஸ்ரீமதிக்கு டெல்லி பயிற்சிக்குத் தேவையான பிரத்யேக ஆடைகள், ரன்னிங் ஷூ, டிராவல் பேக் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களையும் தானே தருவதாக உறுதியளித்தார் கனிமொழி எம்.பி. இதைத்தொடர்ந்து, தூத்துக்குடியில் மாணவி ஸ்ரீமதி டெல்லி சென்று அங்கே பயிற்சி பெறுவதற்கான அத்தனை பொருட்களையும் அம்மாணவிக்கு அளித்தார்.

கனிமொழி எம்.பி மேலும் தான் டெல்லி வரும்போது அவ்வப்போது பார்த்துக்கொள்வதாகவும் எவ்வித கவலையும் இன்றி, பயிற்சியில் ஈடுபட்டு தமிழகத்துக்கும், தூத்துக்குடிக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்றும் மாணவியை பாசத்தோடு வாழ்த்தினார். கனிமொழி எம்.பி. மாணவியின் குடும்பத்தினரிடமும் நலம் விசாரித்தார்.

கிராம சபை கூட்டத்தில் தன்னை சந்தித்து உதவி கேட்ட ஒரு கிராமத்துப் பெண்ணின் திறமையை ஊக்கப்படுத்தி, அவரை டெல்லி வரை சென்று பயிற்சி பெறும் அளவுக்கு உயர்த்திய கனிமொழி எம்.பி-க்கு மாணவியின் குடும்பத்தினர் நெகிழ்ச்சியோடு நன்றி தெரிவித்தனர்.

banner

Related Stories

Related Stories