தமிழ்நாடு

நவம்பர் 26 முதல் பொறியியல் செமஸ்டர் தேர்வு: 60 மதிப்பெண்களுக்கு நடைபெறும்- அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு!

அண்ணா பல்கலைக்கழகத்தில் நடப்பு செமஸ்டர் தேர்வுகள், ஆன்லைன் மூலமாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 26 முதல் பொறியியல் செமஸ்டர் தேர்வு: 60 மதிப்பெண்களுக்கு நடைபெறும்- அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

நாடு முழுவதும் கொரோனா தொற்று காரணமாக பொதுமுடக்கம் அமலில் இருப்பதால் பள்ளி கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் ஆன்லைன் வழியாக பாடம் நடத்தி வருகின்றன.

இந்நிலையில், பொறியியல் கல்லூரிகளில் நடப்பு பருவத்துக்கான எழுத்து தேர்வு நவம்பர் 26-ம் தேதி தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

பொறியியல் மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில், பருவத் தேர்வு அக்டோபர் 28-ம் தேதி முதல் ஆன்லைனில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால், இணையதள கோளாறு உள்ளிட்ட சிக்கல்களால் குறிப்பிட்ட காலத்துக்குள் பாடங்களை நடத்தி முடிப்பது கடினம் என்றும், பருவத் தேர்வை தள்ளி வைக்கவேண்டும் என்றும் பொறியியல் கல்லூரிகள் கோரிக்கை விடுத்தன.

இதையடுத்து, பருவத் தேர்வு நடைபெறும் தேதியை தள்ளிவைத்து திருத்தப்பட்ட அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது அண்ணா பல்கலைக்கழகம்.

நவம்பர் 26 முதல் பொறியியல் செமஸ்டர் தேர்வு: 60 மதிப்பெண்களுக்கு நடைபெறும்- அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு!

அதன்படி நடப்பு பருவத்துக்கான இறுதி வேலை நாள் நவம்பர் 13ம் தேதியுடன் முடிவடையும் என்றும் நவம்பர் 17 முதல் செய்முறைத் தேர்வுகளும், நவம்பர் 26-ம் தேதி முதல் எழுத்துத் தேர்வும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் நடப்பு செமஸ்டர் தேர்வுகள், ஆன்லைன் மூலமாக நடைபெறும் என்றும், ஒரு மணிநேரத் தேர்வாக 60 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தொலைதூரக் கல்வி பயிலும் மாணவர்கள், அரியர் மாணவர்களுக்கும் ஆன்லைன் மூலமாகவே தேர்வு நடைபெறும் என்றும் அரியர் மாணவர்களுக்கு, உரிய அனுமதி வந்தபின் தேர்வு நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories