தமிழ்நாடு

ரம்மி ஆடி பணத்தை இழந்ததால் சென்னையில் வாலிபர் தற்கொலை.. ஆன்லைன் விளையாட்டால் தொடரும் பலிகள்!

ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ரம்மி ஆடி பணத்தை இழந்ததால் சென்னையில் வாலிபர் தற்கொலை.. ஆன்லைன் விளையாட்டால் தொடரும் பலிகள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

விழுப்புரம் மாவட்டம் ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குமரேசன். இவர் சென்னை பெரம்பூர் சீனிவாசா தெருவில் நண்பர்களுடன் தங்கி தனியார் வங்கியில் விற்பனை பிரிவில் பணியாற்றி வந்துள்ளார்.

குமரேசன் ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு அடிமையானவர் என தெரிகிறது. தொடர்ந்து விளையாடி பணத்தையும் இழந்ததாக கூறப்படுகிறது. ஆயுதபூஜை விடுமுறைக்காக நண்பர்கள் சொந்த ஊர் சென்ற போதும் குமரேசன் பணத்தை இழந்த பிறகு வீட்டிற்கு செல்லாமல் அறையிலேயே தங்கியுள்ளார்.

இந்நிலையில், நேற்று இரவு 11 மணி அளவில் அவரது அறையிலிருந்து செல்போன் ஒலித்துக் கொண்டிருந்த போதும் எடுக்காத காரணத்தினால் சந்தேகமடைந்த நண்பர்கள் பார்த்தபோது குமரேசன் தூக்கில் தொங்கியபடி சடலமாக கிடந்துள்ளார்.

ரம்மி ஆடி பணத்தை இழந்ததால் சென்னையில் வாலிபர் தற்கொலை.. ஆன்லைன் விளையாட்டால் தொடரும் பலிகள்!

இது தொடர்பாக செம்பியம் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் குமரேசன் ஆன்லைன் ரம்மி விளையாட பணத்தை இழந்ததால் தற்கொலை செய்திருக்கிறார் என தெரியவந்துள்ளது.

banner

Related Stories

Related Stories