தமிழ்நாடு

“யாரால் நடமாட முடிந்தது என்று உணர்ந்து பேசுக!”- பா.ஜ.க தலைவர் எல்.முருகனுக்கு ஆதித்தமிழர் பேரவை கண்டனம்!

ஊடக வெளிச்சத்திற்காக அவ்வப்போது சில உளறல்களை அவிழ்த்து விடுவதை தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் நிறுத்திக் கொள்ளவேண்டும்.

“யாரால் நடமாட முடிந்தது என்று உணர்ந்து பேசுக!”- பா.ஜ.க  தலைவர் எல்.முருகனுக்கு ஆதித்தமிழர் பேரவை கண்டனம்!
Vignesh
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியாரின் பணிகளின் காரணமாகவே "நாமெல்லாம் சுயமரியாதையுடன் நடமாட முடிகிறது'' என்பதை எல்.முருகன் உணரவேண்டும் என ஆதித்தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் இரா.அதியமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்திலே தனக்கென இடம் இல்லாத பா.ஜ.க தற்போது தமிழக மக்களின் அரணாக விளங்கக் கூடிய எதிர்க்கட்சியான தி.மு.கவினை சீண்டிப்பார்ப்பதும், ஊடக வெளிச்சத்திற்காக அவ்வப்போது சில உளறல்களை அவிழ்த்து விடுவதை தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் நிறுத்திக் கொள்ளவேண்டும்.

பெண்களையும் ஒட்டுமொத்த (பார்ப்பன ஆண்களைத் தவிர) மக்களையும் இழிவுபடுத்தும் மனுஸ்மிருதியை 1927 களிலேயே எரித்த அம்பேத்கர், பின்னர் "தான் இயற்றிய சட்டங்கள் மக்களுக்கு பயன் அளிக்கவில்லை எனில் நானே கொளுத்துவேன்" என்றும் சூளுரைத்திருக்கிறார் என்பதை முருகன் தெரிந்திருக்க வேண்டும்.

கடந்த இரண்டு மூன்று தினங்களாக பெண்களுக்கான நீலிக் கண்ணீர் வடிக்கும் பா.ஜ.க. இந்திய விடுதலைப் போரில் முதல் தற்கொலைப் போராளியான பட்டியல் அருந்ததியர் இனத்தைச் சார்ந்த குயிலி அவர்கள் தன்னுயிர் தந்து 240 ஆண்டுகளாகியும் பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் நேற்றைய தினத்தில் கொண்டு சேர்த்ததுண்டா??

“யாரால் நடமாட முடிந்தது என்று உணர்ந்து பேசுக!”- பா.ஜ.க  தலைவர் எல்.முருகனுக்கு ஆதித்தமிழர் பேரவை கண்டனம்!

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களை பார்த்து "வெளியே நடமாட முடியாது " என்று சீண்டிப்பார்க்கும் எல்.முருகன் அவர்களுக்கு,

"தொட்டால் தீட்டு, பார்த்தால் தீட்டு, தனி சுடுகாடு தனிக்குவளை” என்று சொல்லி ஊர் தனி, சேரி தனி என்று நம் முன்னோர்களை பிரித்து வைத்து "வெளியே நடமாட முடியாமல் தடுத்தது "மனு(அ)தர்மம் தானே மனிதர்களை மனிதனாக மதிக்காத இந்த கொடுமைகளை எல்லாம் சரி செய்வதற்காகத் தானே உருவாக்கப்பட்டது தாழ்த்தப்பட்டோர் ஆணையம்.

தேசிய தாழ்த்தப்பட்ட ஆணையத்தில் இதுபோன்ற ஆயிரக்கணக்கான கொடுமைகள் நாள்தோறும்பதிவு செய்யப்பட்டிருக்கும் இக்கொடுமைகளுக்கு எல்லாம் காரணம் மனு அதர்மம் தானே.

அப்படி தெரிந்திருக்கவில்லை என்றால் ஒரு ஆணையத்தின் துணைத் தலைவராக இருந்து கொண்டு சட்டமேதை அம்பேத்கர் அவர்கள் வகுத்த பட்டியல் சமூக பாதுகாப்பு சட்டத்திற்கு எதிராக மக்களுக்கு செயலாற்றி உள்ளீர்கள் என்பதையே உங்கள் பேச்சு தெளிவுபடுத்தி இருக்கின்றது.

இந்தியாவில் அம்பேத்கர் அவர்கள் இயற்றிய சட்டங்கள் குறிப்பாக பா.ஜ.க ஆளுகின்ற மாநிலங்களில் அவல நிலைக்குத்தான் தள்ளப்பட்டுள்ளது.

தலித் மக்கள் வெளியே நடமாட முடியாத படி கொடுமைகள் இந்து மனு ஸ்ருமிதியின் படியே அரங்கேறுகிறது என்பதை செய்திகள் மூலம் அம்பலப்படுகின்றது.

ஆனால் தமிழகத்தின் நிலைமை அப்படியில்லை அம்பேத்கர் இயற்றிய சட்டத்தோடு பார்ப்பனியத்திற்கு எதிராக தந்தை பெரியாரின் ஏறத்தாழ 80 ஆண்டுகால பணியின் காரணமாக தான் "நாமெல்லாம் சுயமரியாதையுடன் நடமாட முடிகிறது'' என்பதை எல்.முருகன் உணரவேண்டும்.

மனித மாண்பை குழிதோண்டிப் புதைக்கும் கையால் மலம் அள்ளும் தொழிலாளர்களின் மறுவாழ்வுக்காக தொழிலாளர் வாரியம் அமைத்தது அறுபதாண்டு காலத்தில் சமூக கல்வி வேலைவாய்ப்பில் பொருளாதாரத்தில் முன்னேறாத அருந்ததியர் சமூகத்திற்கு மூன்று விழுக்காடு உள்ளிட்ட ஒதுக்கீடு கொடுத்து இன்றைக்கு முன்னேற்றம் தந்தது திராவிட முன்னேற்றக் கழகம்.

“யாரால் நடமாட முடிந்தது என்று உணர்ந்து பேசுக!”- பா.ஜ.க  தலைவர் எல்.முருகனுக்கு ஆதித்தமிழர் பேரவை கண்டனம்!

கக்கத்தில் வைத்து துண்டு கழுத்துக்கு வந்திருக்கிறது. குனிந்த நாம் நிமிர்ந்து நின்று இருக்கிறோம் எழுதக்கூடாது படிக்கக் கூடாது என்ற நிலைமை மாறி இன்றைக்கு பொறியாளர்களாக மருத்துவர்களாக நீதிபதிகளாக மாவட்ட ஆட்சியராக அமைச்சர்களாக சபாநாயகராக மாறி இருக்கிறோம் என்று சொன்னால் அதற்கு காரணம் தந்தை பெரியாரின் பணியும் திராவிட இயக்கமும் தான் காரணம் என்பதை எல்.முருகன் அறிந்திருந்தும் அறியாதது போல் நடிப்பது ஏன் என்பதை தமிழக மக்கள் அறிவார்கள்.

மருத்துவத் துறையில் 50 விழுக்காடு இட ஒதுக்கீடு உச்சநீதிமன்ற தீர்ப்பு அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு தாமதம் செய்கின்ற ஆளுநரின் முடிவு இவைகளை எதிர்க்க முடியாத ஆளுகின்ற அ.தி.மு.கவின் இயலாமையை மறைப்பதற்காகவே திட்டமிட்டு நீங்கள் நடத்துகின்ற நாடகம் என்பதை அறிவோம்

நிறைவாக, பார்ப்பனியத்தால் ஒடுக்கப்பட்ட மக்களை பேச வைத்த நடக்க வைத்த படிக்க வைத்த மனிதர்களாக நடமாட வைத்த திராவிட மண்ணில் இருந்து சொல்லிக் கொள்கிறோம், "நாவை அடக்கிக் கொண்டு அறம் சார்ந்த அரசியலில் ஈடுபடுங்கள் இல்லையேல், வரும் காலத்தில் தமிழக மக்கள உங்களையும், சங் பரிவார குழுக்களையும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அடிமை அரசையும் தமிழக மண்ணில் இருந்து அப்புறம் படுத்துகின்ற நாள் வெகுதொலைவில் இல்லை.

மேலும் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எதிராக கலவரத்தை தூண்டும் வகையில் பேசுகிற எல்.முருகன் அவர்களுக்கு ஒடுக்கப்பட்ட மக்களின் சார்பில் வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories