தமிழ்நாடு

குவைத்தில் சிக்கியுள்ள 30,000 தமிழக தொழிலாளர்களை விரைவில் மீட்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

30 ஆயிரம் தமிழக தொழிலாளர்களை மீட்டுவரக்கோரி வெளிநாடு வாழ் தமிழர்கள் நலச்சங்கம் சார்பில் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு!

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

குவைத் நாட்டில் சிக்கியுள்ள முப்பதாயிரம் தமிழக தொழிலாளர்களை விரைவில் மீட்டுவர வழிவகை காணுமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக குவைத்தில் சிக்கியுள்ள 30 ஆயிரம் தமிழக தொழிலாளர்களை மீட்டுவரக்கோரி வெளிநாடு வாழ் தமிழர்கள் நலச்சங்கம் சார்பில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்தநிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதி அசோக் பூஷன் தலைமையிலான அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது ஆஜரான மத்திய அரசு வழக்கறிஞர், குவைத் நாட்டில் சிக்கியுள்ள முப்பதாயிரம் தமிழக தொழிலாளர்களை மீட்க வெளியுறவுத்துறை மூலம் அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் தற்போதுதான் சூழல் மாறிவிட்டதே என்று கூறி அவர்களை மீட்டுவருவதில் என்ன பிரச்சினை என்றும் மத்திய அரசு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினர்.

இதனையடுத்து, உச்சநீதிமன்ற நீதிபதிகள் இந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணுமாறு கூறி இந்த வழக்கை 4 வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.

banner

Related Stories

Related Stories