தமிழ்நாடு

குட்கா, கஞ்சா போன்று தலைதூக்கும் ஹூக்கா கலாசாரம்.. ஒரே நாளில் சென்னையில் 14 பேர் அதிரடி கைது!

நுங்கம்பாக்கம் மற்றும் ஆயிரம்விளக்கு பகுதிகளில் 7 இடங்களில் விடுதிகளின் போர்வையில் ரகசியமாக ஹுக்கா பார் நடத்தி வந்த 14 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

குட்கா, கஞ்சா போன்று தலைதூக்கும் ஹூக்கா கலாசாரம்..  ஒரே நாளில் சென்னையில் 14 பேர் அதிரடி கைது!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னையில் பல்வேறு பகுதிகளில் கஞ்சா, குட்கா போன்ற போதை பொருட்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. போலிஸாரின் நடவடிக்கை காரணமாக பல இடங்களில் குட்கா போன்ற போதை பொருட்கள் அதிக அளவில் பிடிபட்டு வருகிறது.

இந்த நிலையில் இதற்கு மாறாக பல நட்சத்திர விடுதிகளிலும், தனியார் தங்கும் விடுதிகளிலும் ஹுக்கா என்னும் போதைப்பொருள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக சென்னையில் நுங்கம்பக்கம் மற்றும் ஆயிரம் விளக்குப் பகுதிகளில் விடுதிகள் நடத்துவதைப் போல் ஹுக்கா பார்கள் செயல்பட்டு வருவதாக போலிஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

குட்கா, கஞ்சா போன்று தலைதூக்கும் ஹூக்கா கலாசாரம்..  ஒரே நாளில் சென்னையில் 14 பேர் அதிரடி கைது!

இந்த தகவலின் அடிப்படையில் நேற்று ஒரே நாளில் நுங்கம்பாக்கம் மற்றும் ஆயிரம் விளக்கு பகுதியில் 7 இடங்களில் போலிஸார் திடீர் சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் ஹுக்கா பார் நடத்திய 14 பேரை போலிஸார் கைது செய்தனர்.

நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் உள்ள தனியார் உணவு விடுதியில் ஹுக்கா பார் நடத்திய மணிப்பூரை சேர்ந்த ஆன்பம், அதேபோல், நுங்கம்பாக்கம், திருமூர்த்தி நகர் பகுதியில் உள்ள தனியார் CAFEல் ஹூக்கா பார் நடத்தி வந்த அரக்கோணத்தை சேர்ந்த கரி முல்லா (34), வில்லிவாக்கத்தை சேர்ந்த லியோ (29) ஆகியோரை கைது செய்தனர்.

நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலையில் உள்ள தனியார் Restaurantல் ஹூக்கா பார் நடத்தி வந்த மாதாவரம் பகுதியை சேர்ந்த கமலசேகரன் (37), வியாசர்பாடி பகுதியை சேர்ந்த கண்ணன் (29) மற்றும் நுங்கம்பக்கம் நெடுஞ்சாலை, திருமூர்த்தி நகர் பகுதியில் உள்ள தனியார் CAFE ல் ஹூக்கா பார் நடத்தி வந்த தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த வீரகுமார் (22) மற்றும் நுங்கம்பாக்கம் பகுதியை சேர்ந்த கபாங்சூயி (28), பியூஸ் (38) ஆகியோரையும் போலிஸார் கைது செய்துள்ளனர்.

அதேபோல் நுங்கம்பாக்கம் ஜெகநாதன் தெருவில் ஹூக்கா பார் நடத்தி வந்த சதீஷ் (32), பார்த்திபன் (39) மற்றும் ஆயிரம் விளக்கு, கிரீம்ஸ் ரோடு, பகுதியில் ஹூக்கா பார் நடத்தி வந்த முகேஷ் (29), மான்வர் அன்சாரி (19) , மேலும் ஆயிரம் விளக்கு, வேலஸ் கார்டன், 2வது தெருவில் தனியார் கஃபே வில் ஹூக்கா பார் நடத்தி வந்த திவான் (27), மனோ (27) ஆகிய 14 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து பல லட்சம் மதிப்புடைய ஹூக்கா உபகரண பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories