தமிழ்நாடு

மளிகைக்கடை போர்வையில் குட்கா குடோன் : கேளம்பாக்கத்தில் மூட்டை மூட்டையாக சிக்கிய குட்கா - 2 பேர் கைது!

குடோனில் பதுக்கி வைத்து கடைகளுக்கு விற்பனை செய்து வந்த 250 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மளிகைக்கடை போர்வையில் குட்கா குடோன் : கேளம்பாக்கத்தில் மூட்டை மூட்டையாக சிக்கிய குட்கா - 2 பேர் கைது!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை அடையாறு துணை ஆணையர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு அடையாறு காவல் சரகத்தில் குட்கா, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்பவர்களை கண்டறிந்து தொடர்ந்து கைது நடவடிக்கைகளில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில், சென்னை திருவான்மியூர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் ஒருவர் கடைகளுக்கு ஹான்ஸ், கூல் லிப், பாக்கு உள்ளிட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்து வருவதாக தனிப்படை போலிஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து திருவான்மியூர் பகுதியில் மாறு வேடத்தில் நோட்டமிருந்த வேளையில் டி.வி.எஸ் எக்ஸ்.எல் பைக்கில் ஒருவர் குட்கா பொருட்களுடன் கடைகளுக்கு விற்பனை செய்து வருவதை கண்ட போலிஸார் அவரைப் பிடித்து அவரிடமிருந்த 50-லோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.

மளிகைக்கடை போர்வையில் குட்கா குடோன் : கேளம்பாக்கத்தில் மூட்டை மூட்டையாக சிக்கிய குட்கா - 2 பேர் கைது!

விசாரணையில் அவர் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த ஆசிப் (19) என்பதும், அவர் கேளம்பாக்கம் அருகே மளிகை கடை நடத்தி வரும் அம்சா ராஜா (41) என்பவரிடமிருந்து குட்கா பொருட்களை வாங்கி கடைகளுக்கு விற்பனை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து உடனடியாக கேளம்பாக்கத்துக்கு விரைந்த தனிப்படை போலிஸார் அம்சா ராஜாவை கைது செய்து அவர் மளிகை கடை அருகே உள்ள குடோனில் பதுக்கி வைத்திருந்த 200 கிலோ குட்கா பொருட்களை கைப்பற்றினர். மளிகை கடை போர்வையில் குடோனாக மாற்றி குட்கா பொருட்களை விற்பனை செய்து வந்த ஆசிப், அம்சா ராஜா ஆகிய இருவரை கைது செய்த போலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

banner

Related Stories

Related Stories