தமிழ்நாடு

சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் போக்சோ சட்டத்தில் சிறையில் அடைப்பு!

நீலகிரி மாவட்டம் கோத்கிரியில் சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த இளைஞரை, போக்சோ சட்டத்தில் கைது செய்து போலிஸார் சிறையில் அடைத்தனர்.

சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் போக்சோ சட்டத்தில் சிறையில் அடைப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜபாண்டி. இவர், கோத்தகிரியில் உள்ள கேர்கம்பை கிராமத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு முன் பணிபுரிந்து வந்ததுள்ளார். இந்நிலையில், ராஜபாண்டி அதேக் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவரிடம் தனக்கு திருமணம் ஆனதை மறைத்து, சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கோவைக்கு அழைத்து சென்றுள்ளார்.

பின்னர் அங்கேயே வாடகைக்கு வீடு எடுத்து தங்கி உள்ளார். இதனைத் தொடர்ந்து பெற்றோர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில், ராஜபாண்டியை தேடிய காவல்துறையினர் இவர் மீது ஏற்கனவே சிவகங்கையில் தன் உறவினர் பெண் ஒருவரை கொலை செய்த வழக்கு மற்றும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக இவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்த கோத்தகிரி பொறுப்பு ஆய்வாளர் சாந்தி, ராஜபாண்டியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் போக்சோ சட்டத்தில் சிறையில் அடைப்பு!

தமிழகத்தில் நாளுக்கு நாள் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக அதிகரிக்கும் பாலியல் குற்றங்களால் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்வி குறியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக பெண்கள் அமைப்பினர் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories