தமிழ்நாடு

தனியார்மயம், ஆட்குறைப்பு நடவடிக்கைகளை கைவிட வலியுறுத்தி அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

அரசு துறைகளில் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை கைவிட வலியுறுத்தி சென்னை நந்தனத்தில் உள்ள கருவூல கணக்குத் துறை முன்பாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தனியார்மயம், ஆட்குறைப்பு நடவடிக்கைகளை கைவிட வலியுறுத்தி அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!
Vignesh
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

அரசு துறைகளை தனியாருக்கும் தாரை வார்க்கும் ஒருங்கிணைந்த நீதி மற்றும் மனித வள மேலாண்மை திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும் அரசு துறைகளில் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை கைவிட வலியுறுத்தி சென்னை நந்தனத்தில் உள்ள கருவூல கணக்குத் துறை முன்பாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்தில் பேசிய தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில தலைவர் அன்பரசு, அனைத்துத் துறைகளிலும் ஆட்குறைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வதையும், அரசு துறைகளை தனியாருக்கு தாரை வார்க்கும் போக்கையும் தமிழக அரசு கைவிட வேண்டும் என வலிடுறுத்தினார்.

மேலும், போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாத நிலையில் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்டதில் சேர்ப்பதை ரத்து செய்திட வலியுறுத்தி கருவூல கணக்குத்துறையில் காலியாக உள்ள 300 பணியிடங்களை நிரப்பாமல் இருப்பதை கண்டித்து தொடர்ந்து தமிழக அரசுக்கு முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இன்று கருவூல கணக்குத் துறை ஆணையரிடம் கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் எனத் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories