தமிழ்நாடு

கொரோனாவுக்கு நடுவே தமிழகத்தை அச்சுறுத்தும் டெங்கு - 1,785 பேருக்கு டெங்கு காய்ச்சல்!

டெங்கு மற்றும் கொரோனாவுக்கும் ஒரே அறிகுறி என்பதால் பாதிக்கப்பட்டவர்கள் அச்சம்.

கொரோனாவுக்கு நடுவே தமிழகத்தை அச்சுறுத்தும் டெங்கு  - 1,785 பேருக்கு டெங்கு காய்ச்சல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கொரோனாவால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 லட்சத்தை தாண்டும் நிலையில் தற்போது டெங்கு காய்ச்சலும் சேர்ந்துகொண்டுள்ளது.

தற்போது தமிழகத்தில் கொரோனாவிற்கு மத்தியில் 1,785 பேருக்கு டெங்கு காய்ச்சல் பரவிய பின்னரே சுகாதாரத்துறை தரப்பிலிருந்து மாவட்ட ஆட்சியர்களுக்கு கொசு ஒழிப்பு நடவடிக்கைகள், மற்றும் நோய்த் தடுப்புப் பணிகளை முழு வீச்சில் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சுகாதாரத்துறை தரப்பிலிருந்து தாமதமாகக் கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் தொற்று மற்றும் டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் ஏறத்தாழ ஒரே மாதிரியானவை என்பதால் நோயின் தாக்கத்தைக் கண்டறிதலில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சளி, காய்ச்சல், இருமல், உடல்வலி என இரண்டுக்கும் ஒரே மாதிரியான அறிகுறிகள் இருப்பதால் பாதிக்கப்பட்டவர்களுக்கு டெங்கு மற்றும் கொரோனா என இரண்டு பரிசோதனைகளையும் செய்ய வேண்டிய அவசியம் உள்ளது.

கொரோனாவுக்கு நடுவே தமிழகத்தை அச்சுறுத்தும் டெங்கு  - 1,785 பேருக்கு டெங்கு காய்ச்சல்!

மேலும், மழைக்காலம் என்பதால் தெருக்களில் மழைநீர் அதிகமாகத் தேங்கும் என்பதால் பொதுமக்கள் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் இருக்கவேண்டிய அவசியம் உள்ளது. எனவே கொரோனா சிகிச்சைக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தை டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கும் அளிக்க வேண்டும் எனவும் மேலும் சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.

banner

Related Stories

Related Stories