தமிழ்நாடு

நில மோசடி விவகாரம் : நடிகர் சூரி வழக்கில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் - காவல்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு!

நில மோசடி செய்த விவகாரத்தில் முன்னாள் டிஜிபி மீதான புகாரை சிபிஐ விசாரணைக்கு மாற்ற கோரி நகைச்சுவை நடிகர் சூரி தாக்கல் செய்த வழக்கில் காவல்துறை அறிக்கை அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

வெண்ணிலா கபடிக்குழு படம் மூலம் பரோட்டா சூரி என்ற கதாப்பாத்திரம் மூலம், சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக பல படங்களில் நடித்து வருபவர் நகைச்சுவை நடிகர் சூரி. தொடர்ந்து நடிகர் விஷ்ணு விஷாலுடன் கதாநாயகன் என்ற படத்தில் இணைந்து நடித்தார். அந்த அடிப்படையில், விஷ்ணுவின் டி.ஜி.பி ரமேஷ் குட்வாலா அறிமுகமாகியுள்ளார்.

அப்போது, சென்னை சிறுசேரியில் 5.25 கோடி ரூபாய் மதிப்பில் நிலம் ஒன்று உள்ளதாகவும் தெரிவித்து,ரமேஷ் குட்வாலா மற்றும் அன்புவேல் ராஜன் இருவரும் நடிகர் சூரியிடம் விற்பனை செய்துள்ளனர். இந்நிலையில் நிலத்தில் பல வில்லங்கங்கள் இருப்பது நடிகர் சூரிக்கு தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்து டி.ஜி.பி ரமேஷ் குட்வாலாவிடம் முறையிட்டுள்ளார். நிலத்தை திருப்பி எடுத்துகொள்வதாக கூறி பணத்தில் 60 லட்ச ரூபாய் கொடுத்துள்ளார். மீதிபணத்தை தருவதாக கூறி பல மாதகாலமாக ரமேஷ் குட்வாலா,அன்புவேல் ராஜன் இழுத்தடித்துள்ளார்.

நில மோசடி விவகாரம் : நடிகர் சூரி வழக்கில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் - காவல்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு!

இதனிடையே டிஜிபி ரமேஷ் குட்வாலா ஓய்வுபெற்றார். இந்த பிரச்சினைகள் தான் ஏமாற்றப்பட்டதாக அதிர்ச்சியடைந்து, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடிகர் சூரி வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதனை ஏற்று கொண்ட சைதாப்பேட்டை நீதிமன்றம் முன்னாள் டி.ஜி.பி.ரமேஷ் குட்வாலா மற்றும் அன்புவேல் ராஜன் மீது வழக்கு பதிவு செய்யுமாறு உத்தர்விட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் சூரி புகார் அளித்துள்ளார். 50 லட்ச ரூபாக்கு மேல் மோசடி இருப்பதால் வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

காவல்துறையினரும் முதற்கட்டமாக சூரியன் விசாரணை நடத்தினர் இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் சூரி மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் முன்னாள் டிஜிபி சம்பந்தப்பட்ட உள்ளதால் இந்த விசாரணையை, தமிழக காவல்துறை விசாரித்தால் சரியாக இருக்காது என்றும், இந்த புகாரை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார்.

நில மோசடி விவகாரம் : நடிகர் சூரி வழக்கில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் - காவல்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு!

இந்த வழக்கு நீதிபதி ரவீந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது .அப்போது மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டது. மனுதாரர் தரப்பில் சிசிபி தமிழக காவல்துறை தான் என்பதனால் இதை சிபிஐக்கு மாற்றவேண்டும் என்று கேட்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதி இதுவரை நடைபெற்ற விசாரணை தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய காவல்துறைக்கு, உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வருகிற 28-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.

banner

Related Stories

Related Stories