சினிமா

நிலம் வாங்கித் தருவதாக நடிகர் சூரியிடம் மோசடி : நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை மீது வழக்கு பதிவு !

நிலம் வாங்கித் தருவதாக நடிகர் சூரியிடம் மோசடி செய்த முன்னாள் டி.ஜி.பி ரமேஷ் குட்வாலா மற்றும் திரைபட தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் ஆகியயோர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நிலம் வாங்கித் தருவதாக நடிகர் சூரியிடம் மோசடி : நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை மீது வழக்கு பதிவு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராகப் பல படங்களில் நடித்து வருபவர் நடிகர் சூரி. இந்தநிலையில், நடிகர் விஷ்ணு விஷாலுடன் ‘கதாநாயகன்’ என்ற படத்தில் இணைந்து நடித்தார். அந்த அடிப்படையில், விஷ்ணு விஷாலின் தந்தையான டி.ஜி.பி ரமேஷ் குட்வாலா அறிமுகமாகியுள்ளார்.

இந்த நிலையில், கடந்த 2015ம் ஆண்டு சினிமா தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் தயாரிப்பில் "வீர தீர சூரன்" என்கிற திரைப்படத்தில் விஷ்ணு விஷால் ஹீரோவாகவும், நடிகர் சூரி ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் ஒப்பந்தமாகிப் படப்பிடிப்புகள் நடந்தன. அப்போது, நடிகர் சூரிக்கு 40 லட்சம் ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளது.

இந்தநிலையில், சூரி பேசப்பட்ட சம்பளம் தராததால் அது குறித்துக் கேட்டபோது, சம்பளப் பணத்திற்குப் பதிலாக மேலும், சில கோடிகளைக் கொடுத்தால் நல்ல நிலம் ஒன்று விலைக்கு வருகிறது. அதை வாங்கித் தருவதாகக் கூறியுள்ளனர் தயாரிப்பாளர் தரப்பு.

நிலம் வாங்கித் தருவதாக நடிகர் சூரியிடம் மோசடி : நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை மீது வழக்கு பதிவு !

மேலும் இதுதொடர்பாக நடிகர் சூரி கூறியதாவது, முன்னாள் டி.ஜி.பி ரமேஷ் குட்வாலா மற்றும் அன்புவேல் ராஜன் இருவரும் சென்னை சிறுசேரியில் 5.25 கோடி ரூபாய் மதிப்பில் நிலம் ஒன்று உள்ளதாக தெரிவித்து எண்ணிடமிருந்து பல்வேறு தவணைகளாக 3.10 கோடி ரூபாய் பெற்று விற்பனை செய்துள்ளனர்.

இந்நிலையில், நிலம் வாங்கிய பிறகுதான் அதில் உள்ள பல வில்லங்கம் இருப்பது எனக்குத் தெரிய வந்தது. குறிப்பாகப் பாதை சரியாக இல்லாமல் அந்த இடத்தை விற்பனை செய்யமுடியாமல் இருந்தது தெரியவந்தது என்றார்.

இதனையடுத்து தான் மோசடி செய்யப்பட்டதாக உணர்ந்து டி.ஜி.பி ரமேஷ் குட்வாலாவிடம் முறையிட்டுள்ளார் நடிகர் சூரி, எனவே அவர் நிலத்தைத் திருப்பி எடுத்துக்கொள்வதாகக் கூறி சூரியிடம் வாங்கிய பணத்தில் 40 லட்ச ரூபாய் மட்டும் கொடுத்துள்ளார். மேலும் மீதி பணத்தைத் திருப்பித் தருவதாகக் கூறி பல மாத காலமாக ரமேஷ் குட்வாலா மற்றும் அன்புவேல் ராஜன் இழுத்தடித்துள்ளார்.

நிலம் வாங்கித் தருவதாக நடிகர் சூரியிடம் மோசடி : நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை மீது வழக்கு பதிவு !

இதனிடையே டி.ஜி.பி ரமேஷ் குட்வாலா ஓய்வுபெற்றார். தொடர்ந்து சூரி தரப்பினர் விசாரணை செய்ததில், குட்வாலா காவல் அதிகாரியாக இருந்த போது நிலப்பிரச்சனை என்று புகார் வந்த நபரிடம் 2.50 கோடிக்கு நிலத்தை வாங்கிக் கொள்வதாக ஒப்பந்தம் செய்துள்ளார். ஆனால் அதை மறைத்து 5.25 கோடிக்கு வாங்கியதாகப் போலி ஆவணங்கள் ஏற்பாடு செய்து, அதற்கு ஏற்றவாறு ஊர்த் தலைவரிடம் போலி சான்றிதழ் உருவாக்கி நடிகர் சூரியை ஏமாற்றியது தெரியவந்துள்ளது.

நடிகர் சூரி பணத்தைத் திருப்பி கேட்கும் போது 40 லட்சம் மட்டும் கொடுத்து விட்டு 2018ம் ஆண்டு ஜூன் மாதம் மீதி தொகையான 2.70 கோடி தருவதாகக் கூறி ஒப்பந்தம் போட்டுள்ளனர். ஆனால், இரண்டு ஆண்டுகளாகியும் தராததால் அடையாறு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால், முன்னாள் டி.ஜி.பியாக இருப்பதால் போலிசார் ரமேஷ் குட்வாலா மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்துள்ளனர்.

இதனையடுத்து தற்போது சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடிகர் சூரி வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில், முன்னாள் டி.ஜி.பியாக இருந்த ரமேஷ் குட்வாலா ஏமாற்றியதும், நடிகர் விஷ்ணு வங்கிக் கணக்கில் இருந்து பணம் நடிகர் சூரிக்கு கொடுக்கப்பட்டது தொடர்பான ஆவணங்கள் வைத்து வாதங்களை நடிகர் சூரி தரப்பில் முன்வைத்துள்ளனர்.

நிலம் வாங்கித் தருவதாக நடிகர் சூரியிடம் மோசடி : நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை மீது வழக்கு பதிவு !

இதனை ஏற்றுக் கொண்ட சைதாப்பேட்டை நீதிமன்றம் முன்னாள் டி.ஜி.பி ரமேஷ் குட்வாலா மற்றும் அன்புவேல் ராஜன் மீது வழக்கு பதிவு செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அடையாறு போலிசார் முன்னாள் டி.ஜி.பி ரமேஷ் குட்வாலா திரைபட தயாரிப்பாளர் அன்புவேல்ராஜன் ஆகிய இருவர் மீதும் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இது தொடர்பாக முதற்கட்ட விசாரணையை நடிகர் சூரியிடம் போலிசார் நடத்தியுள்ளனர். காவல்துறை உயர் அதிகாரி என்பதால் மத்திய குற்றப்பிரிவு போலிசார் தயங்குவதாக நடிகர் சூரி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நில மோசடி விவகாரத்தில் போலியாக ஆவணம் உருவாக்கி கோடிக்கணக்கில் முன்னாள் டி.ஜி.பியே ஈடுபட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories