
புதுக்கோட்டையை சேர்ந்த கருப்பையா என்பவர் உயர்நீதி மன்றம் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், அறந்தாங்கி நகரம் காரைக்குடி நெடுஞ்சாலையில் செக்போஸ்ட் அருகில் புதிதாக மதுபானக்கடை அமைக்க எடுக்கும் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள். கிருபாகரன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள், 5 ஆண்டுகளில் படிப்படியாக டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என தமிழக அரசு தரப்பில் தெரிவி க்கப்பட்டது.
ஆனால் தற்போது நிலவரம் என்ன என்று தெரியவில்லை? படிப்படியாக கடைகள் மூடப்பட்டுள்ளதா? என கேள்வி எழுப்பினர். கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை ஒவ்வொரு ஆண்டும், எத்தனை கடைகள் மூடப்பட்டுள்ளன?
ஒவ்வொரு ஆண்டும் எவ்வளவு வருமானம் வந்தது என்பது குறித்து, அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.








