தமிழ்நாடு

“ஆடு வழங்கும் திட்டத்தில் ஊழல் : அ.தி.மு.க ஆட்சிக்கு முடிவுகட்டும் நாள் தொலைவில் இல்லை” - கனிமொழி சாடல்!

தமிழக அரசின் இலவச ஆடு வழங்கும் திட்டத்தில் ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழகம் முழுக்க இது குறித்து ஆய்வு நடத்தினால், பெரும் ஊழல் வெளிச்சத்துக்கு வரும்.

“ஆடு வழங்கும் திட்டத்தில் ஊழல் : அ.தி.மு.க ஆட்சிக்கு முடிவுகட்டும் நாள் தொலைவில் இல்லை” - கனிமொழி சாடல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழகத்தில் ஆளும் அ.தி.மு.க அரசில் ஊழல் தலைவரித்தாடுகிறது. ஒவ்வொரு திட்டத்திலும் அதிகாரிகள் துணையோடு ஆளுங்கட்சி பிரமுகர்கள் பெரும் முறைகேடுகளில் ஈடுபடுவது அம்பலமாகி வருகிறது.

விவசாயிகளுக்கு உதவித்தொகை வழங்கும் கிசான் திட்டம், பிரதமர் வீட்டு வசதி திட்டம் ஆகியவற்றில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் எழுந்தது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தற்போது தமிழக அரசின் இலவச ஆடு வழங்கும் திட்டத்தில் ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஆடு வழங்கும் திட்டத்தில் ஊழல் நடந்திருப்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தமிழகம் முழுவதும் இத்திட்டம் குறித்து ஆய்வு செய்தால் பெரும் ஊழல் அம்பலமாகும் எனக் கூறப்படுகிறது.

ஆடு வழங்கும் திட்டத்தில் ஆளுங்கட்சி பிரமுகர்கள் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு மட்டுமே வழங்குவது, போலியான நபர்களின் பெயர்களில் ஆடு வழங்கியதாக கணக்கு காட்டுவது என அதிகாரிகள் துணையுடன் முறைகேடுகளில் ஈடுபடுவதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள தி.மு.க எம்.பி., கனிமொழி, “பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் மாபெரும் ஊழல் புகார் அடங்குவதற்குள், தமிழக அரசின் இலவச ஆடு வழங்கும் திட்டத்தில் ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நாகை மாவட்டத்தில் நடந்த ஊழல் மட்டுமே இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

தமிழகம் முழுக்க இது குறித்து ஆய்வு நடத்தினால், பெரும் ஊழல் வெளிச்சத்துக்கு வரும். அங்கிங்கெனாதபடி எங்கும் ஊழல் நிறைந்துள்ள அ.தி.மு.க ஆட்சிக்கு மக்கள் முடிவுகட்டும் நாள் தொலைவில் இல்லை.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories