தமிழ்நாடு

காவி கும்பலிடம் இருந்து அண்ணா பல்கலையை பாதுக்காத்திடுங்கள்.. ட்விட்டரில் ட்ரெண்டாகும் #Dismiss_Surappa

துணை வேந்தர் பதவியில் இருந்து சூரப்பாவை நீக்கக் கோரி ட்விட்டரில் ஹேஷ்டேக் மூலம் பதிவிடப்பட்டு வருகிறது.

காவி கும்பலிடம் இருந்து அண்ணா பல்கலையை பாதுக்காத்திடுங்கள்.. ட்விட்டரில் ட்ரெண்டாகும் #Dismiss_Surappa
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பா ''ஐந்து ஆண்டுகளில் அண்ணா பல்கலைக்கழகத்தால் 1500 கோடி ரூபாய் நிதி திரட்டிக் கொள்ள முடியும். மாநில அரசின் நிதிப் பங்கீடு இல்லாமலேயே பல்கலைக்கழகத்தால் சமாளிக்கவும் முடியும். ஆகவே உயர் சிறப்பு அந்தஸ்தை அளிக்க வேண்டும்'' என்று மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். இது தமிழக உயர்கல்வி வளர்ச்சியில், குறிப்பாக அண்ணா பல்கலைக்கழகத்தின் வளர்ச்சியில், அக்கறை கொண்டிருக்கும் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு “உயர் சிறப்பு அந்தஸ்து” என்று கூறிவிட்டு - மாநில அரசும் நிதியளிக்க வேண்டும் என்று கூறி வருகிறது மத்திய அரசு. 69 விழுக்காடு இடஒதுக்கீட்டிற்கு எவ்விதப் பாதிப்பும் வராது என்று எவ்வித உத்தரவாதத்தையும் அதிகாரபூர்வமாக அளிக்க மத்திய பா.ஜ.க. அரசு இன்றுவரை மறுத்து வருகிறது.

அ.தி.மு.க. அரசின் சார்பில் இதுகுறித்து ஆராய்ந்து - கொள்கை முடிவு எடுக்க அமைச்சர்கள் குழு ஒன்று அமைக்கப்பட்டு - அந்தக் குழுவின் பரிந்துரை இன்னும் வெளிவராத சூழலில் - ஒரு துணை வேந்தர் எப்படித் தன்னிச்சையாக மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளார்? முதலமைச்சர் பழனிசாமி ரகசியமாகக் கொடுத்த “அனுமதி” காரணமா? என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும் அறிக்கை வெளியிட்டு கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், அண்ணா பல்கலைக்கழகம், தன்னிச்சையாக எப்படி நிதி திரட்டும்? அதுவும் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் சுமையாகவே மாறிவிடும். அப்படியொரு அபாயத்தை, போகிற போக்கில் திட்டமிட்டு ஒரு துணைவேந்தர் உருவாக்கியிருக்கிறார் என்றால் - கல்வியைக் காவி மயமாக்க அவருக்கு அண்ணா பல்கலைக்கழகம்தான் கிடைத்ததா? எனவும் கடுமையான கேள்விக் கணைகளை முன்வைத்துள்ளார் மு.க.ஸ்டாலின்.

இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் பதவியில் இருந்து சூரப்பாவை நீக்க வலியுறுத்தியும், பல பத்தாண்டுகளாக திறம்பட செயல்பட்டுக் கொண்டிருக்கும் அண்ணா பல்கலைக்கழகத்தையும் பாதுகாக்க கோரி #SaveAnnaUniversity மற்றும் #DismissSurappa என்ற ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டாகி வருகிறது.

இந்த ஹேஷ்டேக்கின் கீழ் பலர் அண்ணா பல்கலைக்கழகத்தால் பயன்பெற்று வாழ்வில் முன்னேற்றம் அடைந்திருக்கிறார்கள் எனவும் பதிவிட்டு வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories