தமிழ்நாடு

மொபைல் ஆப் மூலம் போதைபொருளை விற்ற இளைஞர் : கையும் களவுமாக பிடித்த போலிஸ் - விசாரணையில் ‘பகீர்’ தகவல்!

சென்னை முழுவதும் ஆன்லைன் மூலம் போதைபொருட்களை வினியோகம் செய்த 3 பேரை கைது செய்து திருவான்மியூர் போலிஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

மொபைல் ஆப் மூலம் போதைபொருளை விற்ற இளைஞர் : கையும் களவுமாக பிடித்த போலிஸ் - விசாரணையில் ‘பகீர்’ தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சென்னையில் அதிகரித்துவரும் போதை பொருட்கள் மற்றும் கஞ்சா விற்பனையை தடுக்கும் நோக்கில், அடையாறு காவல் மாவட்ட துணை ஆணையாளர் விக்கரமன் தலைமையிலான தனிபடை அமைக்கப்பட்டு போதை பொருள் கடத்தல் ஆசாமிகளை பிடிக்க திட்டம் வகுத்து தேடிவந்தனர்.

இந்நிலையில், ரகசிய தகவலின் அடிப்படையில், சென்னை பெருங்குடி, திருவான்மியூர், பனையூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வெள்ளை நிற தூள் வடிவில் போதை பொருள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக வந்த தகவலையடுத்து, போதை பொருள் விற்பனையாளர்களின் தொலைபேசி எண்மூலம் தொடர்பு கொண்ட போலிஸார் தனக்கு போதை பொருள் வேண்டும் என்று கூறி அடையாறு சிக்னல் அருகே வரவழைத்தனர்.

அதன் படி, ஆசிப்ராஜா (21) என்பவர் இரண்டு சிறிய போதை தூள் பாக்கெட் மற்றும் 2 ஊசி ஆகியவை எடுத்துவந்தார். அந்த வாலிபரை மடக்கி பிடித்து விசாரணை செய்தபோது, பனையூரில் தனியார் மருந்தகத்தில் பணியாற்னும் மதி என்பவர் தன்னிடம் கொடுத்து விற்பனை செய்ய கூறினார். சம்பளமாக பணம் மற்றும் சிறிய அளவு போதை பௌடர் கிடைக்கும் என்று கூறினார்.

மொபைல் ஆப் மூலம் போதைபொருளை விற்ற இளைஞர் : கையும் களவுமாக பிடித்த போலிஸ் - விசாரணையில் ‘பகீர்’ தகவல்!

இதனையடுத்து மருந்தகத்தில் வேலை செய்யும் மதி (32) என்பவரை கைது செய்த போது, அவரிடம் 2 போதை பவுடர் பாக்கெட் மற்றும் 2 ஊசி ஆகியவை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில் மெத்தலின் டை ஆக்ஸி மெத்தாம்பெட் அமின் என்ற ரசாயவேதி பொருள் என்பதும் இதை சிறிய அளவில் நாக்கில் தடவினாலோ அல்லது ஊசி மூலம் எடுத்துக் கொண்டாலோ மூலை நரம்பை பாதிப்பு ஏற்ப்படுத்தி பல மணிநேரம் போதை தரக்கூடியது என்றும் அதிக அளவில் கஞ்சாவை பயன்படுத்தி பெரும் போதை சிறிய அளவு ரசாய துகளில் கிடைப்பதாலும் எளிதாக மறைத்துவைத்து பயன்படுத்தும் வகையில் இருப்பதால் இளைஞர்களிடம் அதிக வரவேற்பு உள்ளதாக தெரிவித்தார்..

மேலும், தான் ஒரு ஓரினசேர்க்கையாளன் என்பதால் கிரண்டர் காய் என்ற இணையத்தில் இணைந்து சாட்டிங் செய்தபோது ராயபுரத்தை சேர்ந்த உசைன் (36) என்பவர் பழக்கம் ஏற்பட்டதாகவும், உசைன் மும்பையிலிருந்து இந்த போதை பொருளை மொத்தமாக வாங்கிவந்து விற்பனை செய்து வந்ததால், சில முறை நான் வாங்கி பயன்படுத்தியதாகவும், நான் மெடிக்கல் கடையில் வேலை பார்ப்பதால் யாருக்கும் சந்தேகம் வராமல் விற்பனை செய்யலாம் என்று எண்ணி 1 கிராம் ரூ. 3.000 என்ற விதத்தில் வாங்கி அதை தண்ணீரில் கரைத்து ஒரு மில்லி ரூ.500 என்று விற்பனை செய்ததாக தெரிவித்தார்.

மொபைல் ஆப் மூலம் போதைபொருளை விற்ற இளைஞர் : கையும் களவுமாக பிடித்த போலிஸ் - விசாரணையில் ‘பகீர்’ தகவல்!

இதனையடுத்து, பெருங்குடியில் தங்கிருந்த உசைனை கைது செய்து விசாரணை செய்தபோது குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் என்றும் 30 ஆண்டுகளாக ராயபுரம் பகுதியில் தங்கியிருப்பதும் தான் ஓரின சேர்க்கையில் நாட்டம் காரணமாக கிரண்டர் காய் சாட் என்ற அப்லிகேசன் மூலம் தொடர்புகொண்டு உரையாடி நண்பர்களை அழைத்து ஒரு முறை இந்த போதை பவுடரை பயன்படுத்த வைத்த உடன் மீண்டும் கேட்கும் போது ஒரு கிராம் ரூ.5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் வரை கூறினாலும் வாங்கி செல்வார்கள் இதில் படித்தவர்கள் மற்றும் இளைஞர்கள் அதிகம் உள்ளனர்.

ஒரு கிராம் பவுடரை 40 முறைக்கு மேல் பயன்படுத்தலாம் என்று தெரிவித்தார். தன்னிடம் பழக்கமான மதி மெடிகல் கடையில் வேலை செய்வதால் சந்தேகம்வராமல் விற்கலாம் என்னு நினைத்து வியாபாரம் செய்யதூண்டியதாகவும் தெரிவித்தார். மேலும் கைது செய்யப்பட்ட ஆசிப்ராஜா, மதி, உசைன் ஆகிய 3 பேரிடமும் திருவான்மியூர் போலிஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

banner

Related Stories

Related Stories