தமிழ்நாடு

நாளொன்றுக்கு 4 பேருக்கு வைரஸ் தொற்று... கோயம்பேடு சந்தையில் மீண்டும் கொரோனா பரவல்... பொதுமக்கள் அச்சம்!

கோயம்பேடு சந்தையில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

நாளொன்றுக்கு 4 பேருக்கு வைரஸ் தொற்று... கோயம்பேடு சந்தையில் மீண்டும் கொரோனா பரவல்... பொதுமக்கள் அச்சம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னையில் கொரோனா பரவலுக்கு முக்கிய காரணிகளில் ஒன்றாக இருந்த கோயம்பேடு சந்தை மீண்டும் திறக்கப்பட்டுள்ள நிலையில், தொழிலாளர்கள் முகக்கவசம் இன்றி பணி செய்து வருவதாலும், தொடர்ச்சியாக வியாபாரிகளின் கூட்டம் அதிகரித்துக் காணப்படுவதாலும் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

கடந்த மே 5ம் தேதி கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக கோயம்பேடு சந்தை மூடப்பட்டது. இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 18-ஆம் தேதி முதல் உணவு தானியக் கிடங்கும், 28-ஆம் தேதி காய்கறி மொத்த சந்தையும் திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அங்கு தினந்தோறும் பல்வேறு சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதில், சந்தைக்கு முகக்கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. இந்த நிலையில் அரசு சார்பில் கோயம்பேடு சந்தையில் உள்ள வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை காலை, மாலை என இருவேளைகளில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நாளொன்றுக்கு 4 பேருக்கு வைரஸ் தொற்று... கோயம்பேடு சந்தையில் மீண்டும் கொரோனா பரவல்... பொதுமக்கள் அச்சம்!

இந்த பரிசோதனைகள் சராசரியாக நாளொன்றுக்கு 150 முதல் 450 பேருக்கு மேல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் நாளொன்றுக்கு 4 முதல் 10 பேருக்கு நோய்தொற்று உறுதி செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கோயம்பேடு சந்தை மீண்டும் திறக்கப்பட்டது முதல் அதாவது செப்டம்பர் 28-ஆம் தேதி முதல் நேற்று வரை சுமார் 2500-க்கும் மேற்பட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில் 40 முதல் 50 நபர்கள் வரை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. தற்போது ஒரு தெருவிற்கு மூன்று முதல் ஐந்து நபர்கள் வரை பாதிக்கப்பட்டு இருந்தாலே அந்த பகுதியை கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படும் என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தார்.

அதன் அடிப்படையில் சென்னையில் மீண்டும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் அதிகரித்துள்ள சூழலில், சென்னை கோயம்பேடு சந்தை மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்கும் பகுதியாக உருவெடுக்கத் துவங்கியுள்ளது என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories