தமிழ்நாடு

மாஸ்க் அணியாமல் வந்தவரிடம் சாதி பெயரை கேட்ட போலிஸ் - கடும் கண்டனத்தை தொடர்ந்து ஆயுதப்படைக்கு மாற்றம்!

’மாஸ்க் போடவில்லையென்றால் அபராதம் கட்டச் சொல்லுங்கள். சாதியை ஏன் கேக்குறீங்க... சாதி என்னன்னு கேட்க சொல்லியிருக்கிறார்களா? என்று வாக்குவாதம்’

மாஸ்க் அணியாமல் வந்தவரிடம் சாதி பெயரை கேட்ட போலிஸ் - கடும் கண்டனத்தை தொடர்ந்து ஆயுதப்படைக்கு மாற்றம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

கொரோனா தொற்று பரவலைத் தடுக்க பொதுமக்கள் வெளியே செல்லும்போது முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே அதையும் மீறி வெளியில் செல்வோரிடம் போலிஸார் அபராதம் விதித்து வருகின்றனர்.

இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் காவல் நிலையத்தைச் சேர்ந்த தலைமைக் காவலர் நடராஜன்‌, காவலர் காசிராஜா இருவரும் பெருமாநல்லூர் நால்ரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த சிவக்குமார் என்பவர் மாஸ்க் அணியாமல் வந்துள்ளார். அவரை தடுத்து முகக்கவசம் அணியாமல் சென்றதற்காக அபராதம் விதித்த காவலர் காசிராஜா அவரது தகவல்களைச் சேகரித்தபோது `ஏன் மாஸ்க் போடலை? பெயர் முகவரி சொல்லுங்கள்...’ என விவரங்களை விசாரித்ததோடு, சாதிப் பெயரையும் கேட்டுள்ளார்.

இதனால் கொதித்துப்போன சிவக்குமார்,`மாஸ்க் போடவில்லையென்றால் அபராதம் கட்டச் சொல்லுங்கள். சாதியை ஏன் கேக்குறீங்க..? சாதி என்னன்னு கேட்கச் சொல்லியிருக்காங்களா?’ என்று காவலர் காசிராஜாவிடம் வாக்குவாதம் செய்துள்ளார் சிவக்குமார்.

மேலும் அந்த சம்பவத்தை அப்படியே தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார் சிவக்குமார். அந்த வீடியோ வைரலாக பரவியதையடுத்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷா மிட்டல் காவலர் காசிராஜாவை நேரடியாக அழைத்து விசாரணை நடத்தியுள்ளார்.

இந்நிலையில் மாஸ்க் அணியாமல் வந்த வாகன ஓட்டியிடம் சாதிப் பெயரைக் கேட்ட காவலர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பலரும் சமூக வலைதளங்களில் கண்டனத்தை தெரிவித்துவந்த நிலையில் தற்போது காவலர் காசிராஜா ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories