தமிழ்நாடு

பீட்சா டெலிவரி செய்வதில் தாமதம்..தகராறாக மாறிய வாக்குவாதம்.. தொழிலதிபரின் சொகுசு காரை உடைத்த டெலிவரி பாய்

பீட்சா டெலிவரி கொடுப்பதில் தாமதமானதால் ஏற்பட்ட தகராற்றில் தொழிலபதிரின் உயர் ரக கார் கண்ணாடியை உடைத்த டெலிவரிபாய் .

பீட்சா டெலிவரி செய்வதில் தாமதம்..தகராறாக மாறிய வாக்குவாதம்.. தொழிலதிபரின் சொகுசு காரை உடைத்த டெலிவரி பாய்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

சென்னை கீழ்ப்பாக்கம் ராஜரத்தினம் தெருவில் வசித்து வருபவர் தொழிலதிபர் ரோசன் ரங்டா (31). இவர் தனது குடும்ப உறுப்பினர்களின் மதிய உணவுக்காக ஸ்விகி மூலமாக பீட்ஸா ஆர்டர் செய்துள்ளார். ஆனால் டெல்வரி பாய் பீட்ஸாவை கொண்டு வருவதற்குத் தாமதம் ஆகியுள்ளது.

இதனால் ரோசன் ரங்டா டெலிவெரி பாய்க்கு போன் செய்து சீக்கிரம் வரும் படி கூறியுள்ளார். இருந்தும் பீசா டெலிவரி பாய் 1 மணி நேரம் கழித்து தாமதமாக பீட்சாவை டெலிவரி செய்வதற்காக வந்துள்ளார்.

பீட்சா டெலிவரி செய்வதில் தாமதம்..தகராறாக மாறிய வாக்குவாதம்.. தொழிலதிபரின் சொகுசு காரை உடைத்த டெலிவரி பாய்

இதனால் ஆத்திரமடைந்த ரோசன் ரங்டா டெலிவரி பாயிடம் வாக்குவாதம் செய்துள்ளார். அப்போது ரோசன் ரங்டா டெலிவரி பாயை ஆபாசமாகத் திட்டியதாகத் தெரியவருகிறது. இதனால் ஆத்திரமடைந்த டெலிவரி பாய் அங்குக் கீழே கிடந்த கல்லை எடுத்து வாடிக்கையாளரின் விலையுயர்ந்த ஃபார்ச்சூனர் காரின் கண்ணாடியை உடைத்துவிட்டு அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் வேகமாகச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாகத் தொழிலதிபர் ரோசன் ரங்டா கீழ்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் டெலிவரி பாயைத் தேடி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories