தமிழ்நாடு

“உ.பி. கொடூரத்துக்கு கொஞ்சமும் குறையாத செயல் இது” - கனிமொழி MP கைது குறித்து மு.க.ஸ்டாலின் காட்டம்!

ஹத்ராஸ் அராஜகத்தைக் கண்டித்து தி.மு.க மகளிரணி நடத்திய ஒளி ஏந்திய பேரணியை தடுத்து, கைது செய்திருக்கிறது தமிழக காவல்துறை. உ.பி.கொடூரத்துக்கு கொஞ்சமும் குறைந்தது அல்ல இது!

“உ.பி. கொடூரத்துக்கு கொஞ்சமும் குறையாத செயல் இது” - கனிமொழி MP கைது குறித்து மு.க.ஸ்டாலின் காட்டம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸில் தலித் பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கடுமையாகத் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். இந்தக் கொடூரச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஹத்ராஸில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்ட தலித் பெண்ணுக்கு நீதி கேட்டு ஆளுநர் மாளிகையை நோக்கிப் பேரணியாகச் சென்ற தி.மு.க மகளிரணிச் செயலாளர் கனிமொழி எம்.பி உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த இந்தப் பேரணியில் ஆயிரக்கணக்கான மகளிர் அணியினர் பங்கேற்றனர். ஆளுநர் மாளிகையை நோக்கிச் சென்ற கனிமொழி உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் போலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டுக் கைது செய்யப்பட்டனர். போலிஸார் அவர்களைக் கைது செய்து வேனில் ஏற்றினர்.

“உ.பி. கொடூரத்துக்கு கொஞ்சமும் குறையாத செயல் இது” - கனிமொழி MP கைது குறித்து மு.க.ஸ்டாலின் காட்டம்!

பேரணியில் ஈடுபட்ட மகளிர் அணியினரை கைது செய்ததைக் கண்டித்து தி.மு.கவினர் வண்டிகளை மறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலிஸார் கேட்டுக்கொண்டதன் பேரில் போலிஸ் வேனிலிருந்து இறங்கி வந்து தொண்டர்களிடம் பேசிய கனிமொழி எம்.பி, பொதுக்களுக்கு நாம் இடையூறாக இருக்கக்கூடாது எனக் கேட்டு, வாகனத்திற்கு வழிவிட அறிவுறுத்தினார். இதையடுத்து தொண்டர்கள் விலகி வழிவிட்டனர்.

போலிஸாரின் கைது நடவடிக்கையைக் கண்டித்துள்ள தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், “ஹத்ராஸ் அராஜகத்தைக் கண்டித்து தி.மு.க மகளிரணி நடத்திய ஒளி ஏந்திய பேரணியை தடுத்து, கைது செய்திருக்கிறது தமிழக காவல்துறை. உ.பி.கொடூரத்துக்கு கொஞ்சமும் குறைந்தது அல்ல இது! தமிழ்நாட்டில் பா.ஜ.க ஆட்சி தான் நடக்கிறதா? அ.தி.மு.க அரசு தனது அராஜக குணத்தை கைவிட வேண்டும்!” என சாடியுள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், “தி.மு.க மகளிரணி செயலாளர் கனிமொழி தலைமையில் ஹத்ராஸ் கொடூர சம்பவத்தைக் கண்டித்து நடந்த ஒளி ஏந்திய பேரணியைத் தடுத்து- கழகத்தினரைக் கைது செய்ததைக் கண்டிக்கிறேன். அடிமைகள் தம் விசுவாசத்தைக் காட்ட உ.பி. காவல்துறையைப் போல் தமிழகக் காவல்துறையை நடக்கச் செய்தது கேவலம்” என விமர்சித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories