தமிழ்நாடு

சென்னையில் ஒரே நாளில் 1,364 பேருக்கும்.. பிற மாவட்டங்களில் 4,258 பேருக்கும் கொரோனா.. மேலும் 65 பேர் பலி!

கொரோனா பாதிப்பால் தமிழகத்தில் இதுவரையில் 9 ஆயிரத்து 718 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். 

சென்னையில் ஒரே நாளில் 1,364 பேருக்கும்.. பிற மாவட்டங்களில் 4,258 பேருக்கும் கொரோனா.. மேலும் 65 பேர் பலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகத்தில் புதிதாக 85 ஆயிரத்து 446 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் 5,622 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதில், 8 பேர் வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வந்தவர்கள் ஆவர்.

சென்னையில் மட்டுமே புதிதாக 1,364 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக ஒரு லட்சத்து 71 ஆயிரத்து 415 பேருக்கு இதுவரையில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.

இதனையடுத்து அதிகபட்சமாக இன்று கோவையில் 486, செங்கல்பட்டில் 395, சேலத்தில் 351, திருவள்ளூரில் 290, தஞ்சாவூரில் 244 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னையில் ஒரே நாளில் 1,364 பேருக்கும்.. பிற மாவட்டங்களில் 4,258 பேருக்கும் கொரோனா.. மேலும் 65 பேர் பலி!
PC

கொரோனாவால் பாதிக்கப்பட்டதில் மாநிலத்தில் மேலும் 65 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இதுகாறும் 9,718 பேர் தமிழகத்தில் கொரோனாவால் பலியாகியிருக்கிறார்கள்.

மேலும், ஒரே நாளில் 5,596 கொரோனா பாதிப்பில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருக்கிறார்கள். இதுவரையில் 5 லட்சத்து 58 ஆயிரத்து 534 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஆகவே தற்போது 46 ஆயிரத்து 255 பேருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

banner

Related Stories

Related Stories